விக்கிபீடியாவில் நேரு குறித்த சர்ச்சை கருத்து: விசாரணைக்கு மத்திய அரசு உத்தரவு


K.N.Vadivel| Last Updated: வியாழன், 6 ஆகஸ்ட் 2015 (04:48 IST)
முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேரு குறித்து விக்கிபீடியாவில், சர்ச்சைக்குரிய கருத்து குறித்து விசாரணை நடத்த மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
 
 
விக்கிபீடியா என்பது எவரும் தொகுக்கக்கூடிய, இலவசமாகப் பயன்படுத்தக்கூடிய உள்ளடக்கங்களைக் கொண்ட ஒரு பன்மொழிக் கலைக்களஞ்சியம் ஆகும்.
 
இந்த விக்கிபீடியா இணையதளப் பக்கத்தில், முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேரு குறித்துச் சர்ச்சைக்குரிய கருத்தை சிலர் வெளியிட்டதாகப் புகார் எழுந்தது. மேலும், இது குறித்து விசாரணை நடத்த வேண்டும் என்று பல்வேறு அரசியல் கட்சிகளும் கோரிக்கை விடுத்தன.
 
மேலும், இந்த விவகாரம் குறித்து, மக்களவையில், புதன்கிழமை அன்று கேள்வி எழுப்பப்பட்டது. அப்போது, இதற்கு, மத்திய தொலைத் தொடர்புத் துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் எழுத்துப்பூர்வமான பதில் அளித்தார், அதில், ஜவஹர்லால் நேரு குறித்துத் தவறான கருத்துகள் விக்கிபீடியாவில் பதிவு செய்யப்பட்டுள்ளதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. அது குறித்து விசாரணை நடத்த மத்திய அரசு உத்தரவிடுள்ளது என்றார். 
 


இதில் மேலும் படிக்கவும் :