சிக்கன் குழம்பு கேட்ட கணவன்!.. போட்டுதள்ளிய மனைவி!. தெலுங்கானாவில் அதிர்ச்சி...
கணவன் மனைவி இடையே வரும் ஒரு சாதாரண சண்டை கூட கொலையில் முடிவதற்கு பல உதாரணங்களை சொல்ல முடியும். உலகெங்கும் இது போன்ற சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டுதான் இருக்கிறது. குறிப்பாக இந்தியாவில் அதிக அளவில் இதுபோன்ற கொலைகள் நடக்கிறது.
இந்நிலையில்தான், தெலுங்கானாவில் கறி குழம்பு கேட்டு சண்டை போட்ட கணவனை அவரின் மனைவியை அர்வாளால் வெட்டிக்கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது..
தெலுங்கானா மாநிலம் கமரெட்டியில் வசித்து வந்த 35 வயது மதிக்கத்தக்க நபருக்கு குடிப்பழக்கம் இருந்ததாக சொல்லப்படுகிறது. இது தொடர்பாக கணவன் மனைவி இடையே தொடர்ந்து சண்டை நடந்து வந்திருக்கிறது. இந்நிலையில்தான் கடந்த 25ம் தேதி குடிபோதையில் வீட்டுக்கு சென்ற அந்த நபர் மனைவியிடம் கறிக்குழம்பு ஏன் வைக்கவில்லை? என்று கூறி சண்டையிட்டதாக தெரிகிறது/
அப்போது ஏற்பட்ட வாக்குவாதத்தில் கோபமடைந்த அவரின் மனைவி அரிவாளால் கணவரை பல இடங்களிலும் வெட்டியிருக்கிறார். அதில் பலத்த காயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக சொல்லப்படுகிறது. இதையடுத்து அந்த பெண்ணை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.