கணவருக்கு கிட்னி கொடுத்து உயிரை காப்பாற்றிய மனைவி.. வாழும் பார்வதி தேவி என புகழ்ந்த கணவர்..!
கணவரின் நீண்ட ஆயுளுக்காக கொண்டாடப்படும் கார்வா சவுத் பண்டிகையின் உணர்வை மத்திய பிரதேசத்தை சேர்ந்த பிரியா என்ற பெண் ஒரு உயிர் கொடுக்கும் செயலாக மாற்றியுள்ளார். ராஜ்கரை சேர்ந்த அவரது கணவர் புருஷோத்தம், என்பவருக்கு இரு சிறுநீரகங்களும் செயலிழந்த நிலையில், உடனடியாக மாற்று அறுவை சிகிச்சை தேவைப்பட்டது.
குடும்பத்தினர் பயந்து பின்வாங்கியபோது, பிரியா சற்றும் தயங்காமல், "என் சிறுநீரகம் என் கணவரின் உயிரை காப்பாற்றுமானால், இதுதான் என் உண்மையான கார்வா சவுத்" என்று உறுதியுடன் தன் சிறுநீரகத்தை தானம் செய்ய முன்வந்தார்.
பொருத்தமான சிறுநீரகம் வெற்றிகரமாக பொருத்தப்பட்டு, புருஷோத்தம் குணமடைந்தார். இந்த செயலை அவர், தன் மனைவி தனக்கு அளித்த 'இரண்டாவது வாழ்க்கை' என்றும், பிரியா தனக்குக் கிடைத்த பார்வதி தேவி என்றும் நெகிழ்ச்சியுடன் கூறுகிறார். பிரியாவை பொறுத்தவரை, இந்த பண்டிகை இப்போது சந்திரனை பார்ப்பது மட்டுமல்ல, அவர் மீட்டெடுத்த வாழ்க்கையை கொண்டாடுவதாகும்.
இதற்கிடையில், நாடு முழுவதும் திருமணமான பெண்கள், நிலவு உதயமாகும் வரை உணவு மற்றும் தண்ணீர் இல்லாமல் நோன்பு நோற்று, இந்த பண்டிகையைக் கடைப்பிடிக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Edited by Siva