வெள்ளி, 19 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Suresh
Last Updated : புதன், 23 ஜூலை 2014 (11:27 IST)

இவர்களுள் எந்த நடிகை உயரமானவர்? அரசுப் பணியாளர் தேர்வாணைய தேர்வில் இடம்பெற்ற கேள்வியால் சர்ச்சை

மத்திய அரசின் பணியாளர் தேர்வாணையத்தின் சார்பில் நடத்தப்பட்ட தேர்வில் 4 நடிகைகளின் பெயர்களைக் கொடுத்து இவர்களில் யார் உயரமானவர் என்று கேட்கப்பட்ட கேள்வியால் சர்ச்சை எழுந்துள்ளது.

மத்திய அரசுப் பணியாளர்களை நியமிப்பதற்காக, அரசுப் பணியாளர் தேர்வாணையம் (ஸ்டாப் செலக்‌ஷன் கமிஷன்) அண்மையில் எழுத்துத் தேர்வை நடத்தியது.

அந்தத் தேர்வில் இடம் பெற்ற ஒரு கேள்வியில் பாலிவுட் நடிகைகளான பிரீத்தி ஜிந்தா, தீபிகா படுகோனே, கேத்ரினா கைப், ஹுமா குரேஷி ஆகியயோரது பெயர்களைக் கொடுத்து இவர்களில் யார் உயரமானவர் என்று கேட்கப்பட்டிருந்தது.

மேலும் காதலர் தினம் எந்த மாதம் கொண்டாடப்படுகிறது? என்ற கேள்வியும் இடம் பெற்றிருந்தது. இந்தக் கேள்வியுடன் இந்த ஆண்டில் நடத்தப்பட்ட நாடாளுமன்ற தேர்தல் தொடர்பான கேள்வியும் கேட்கப்பட்டு, இவை இரண்டில் ஏதாவது ஒரு கேள்விக்குப் பதிலளிக்குமாறு கேட்கப்பட்டிருந்தது.

இந்தக் கேள்வியாள் கடும் சர்ச்சையை ஏற்பட்டுள்ள நிலையில், இதற்கு மகளிர் ஆணையம் கடும் இதற்குக் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

இத்தகையக் கேள்விகள் அநாகரீகமானது என்று மகளிர் ஆணையம் கூறியுள்ளது. இந்த 2 சர்ச்சைக்குரிய கேள்விகளையும் மதிப்பீட்டிற்காக பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளக் கூடாது என்று அரசுப் பணியாளர் தேர்வாணையத்தை வலியுறுத்தி உள்ளனர்.

இந்நிலையில் இந்த சர்ச்சைக்குரிய கேள்விகள் இடம்பெற்றதற்காக அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் தலைவர் பட்டாச்சார்யா வருத்தம் தெரிவித்துள்ளார். இந்தக் கேள்விகள் ஏற்கத்தக்கது அல்ல என்றும் கூறியுள்ளார்.

மேலும் மகளிர் ஆணையத்தின் கோரிக்கையை ஏற்று இந்த 2 கேள்விகளும் மதிப்பீட்டிற்கு எடுத்துக்கொள்ளப்படாது என்றும் பட்டாச்சார்யா உறுதி அளித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.