வெள்ளி, 19 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By வீரமணி பன்னீர்செல்வம்
Last Modified: புதன், 27 மே 2015 (20:50 IST)

இந்தியாவில் முதல் முறையாக கல்லூரி முதல்வரான திருநங்கை

இந்தியாவில் முதல் முறையாக ஒரு திருநங்கை கல்லூரி முதல்வராகியுள்ளார்.
 

 
மானபி பாண்டோபாத்யாய் என்ற திருநங்கை மேற்கு வங்க மாநிலத்தில் கிருஷ்ணாகர் பெண்கள் கல்லூரியில் பேராசிரியராக பணியாற்றி வந்தார். கல்லூரியின் நிர்வாகம் இவரைக் கல்லூரியின் முதல்வராக நியமித்துள்ளது. தங்களது கல்லூரியில் 20 ஆண்டு காலமாக மிக நல்ல முறையில் பணியாற்றிய மானபி உரிய தேர்வு முறைகளுக்கு பின்னரே முதல்வராக நியமிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
கிருஷ்ணாகர் பெண்கள் கல்லூரியின் முதல்வராக ஜூன் மாதம் 9 ஆம் தேதி முதல் அவர் தனது பணியை தொடங்குவார் என்று கல்லூரி நிர்வாகம் அறிவித்துள்ளது.
 
இந்தியாவில் முதல் முறையாக திருநங்கை ஒருவர் கல்லூரியின் முதல்வராக தேர்வு செய்யப்பட்டதற்கு சமூக ஆர்வலர்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.
 
இவர மதான் திருநங்கைகளில் முதல் முறையாக பிஎச்.டி படித்து முடித்தவர். 2005 ஆம் ஆண்டு முடித்து உள்ளார். 1995 ஆம் ஆண்டு திருநங்கைகளுக்காக முதல் திருநங்கைகள் பத்திரிகை தொடங்கினார்.
 
இந்தியாவில் 20 லடசம் திருநங்கைகள் இருப்பதாக கண்ககிடப்பட்டுள்ளது. திருநங்கைகளுக்கு 'மூன்றாம் பாலினம்' என்ற சட்டப்பூர்வ அங்கீகாரம் அளித்து கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. அதன் பிறகு அவர்களுக்கான உரிய சலுகைகள், வேலை வாய்ப்பு, கல்வி உள்ளிட்ட அங்கீகாரத்தை சமூகத்தில் அவர்களும் பெற வழிவகை உருவாகிள்ளது.
 
இது குறித்து மானபி கூறியதாவது:-
 
என்னை பொறுத்தவரை , இது அறியாமைக்கு எதிராக நீண்ட போர் ஆகும். நான் திருநங்கை என்பதால்  ஒரு சமயம் நானும் எனது தந்தையும் கொடிய விளைவுகளை சந்திக்க நேரிடும் என அச்சுறுத்தபட்டோம். நான் எனது குழந்தை பருவத்தை நாடியாவில் தான் கழித்தேன். நான் எனது வீட்டிற்கு மீண்டும் திரும்பியுள்ளேன். அந்த நீண்ட போராட்டத்திற்கு பிறகு எனக்கு கண்ணியமும் பெருமையும் கிடைத்துள்ளது.
 
நான் 2003 மற்றும் 2004ல் ஒரு தொடர்ச்சியான அறுவை சிகிச்சை மூலம் முழு பெண்ணாக மாறினேன். 2004 ஆம் ஆண்டு சோம்நாத் ஆக இருந்த நான் மானபி ஆக மாறினேன் (மானபி என்றால் பெங்காலி மொழியில் அழகிய பெண் என அர்த்தம்). அது அற்புதமான அனுபவம் என்று அவர் கூறினார்.