தொடர்புடைய செய்திகள்
- சீல் வைக்கப்பட்ட EVM அறையில் 4 மணி நேரம் இருந்த மம்தா பானர்ஜி.. என்ன செய்தார்?
- மேற்கு வங்கத்தில் ஆட்சியை இழக்கிறாரா மம்தா பானர்ஜி?.. கருத்துக்கணிப்பில் தகவல்..
- தமிழ்நாட்டை விட அதிகம்.. 5 மணிக்கே 90% வாக்குப்பதிவு.. மே.வங்கத்தில் ஆட்சி மாற்றமா?
- இன்று கொடைக்கானலில் இருந்து சென்னை திரும்பும் முதல்வர் ஸ்டாலின்.. எக்சிட் போல் வெளியான பின் ஆலோசனையா?
- மேற்கு வங்க தேர்தல் கண்காணிப்பாளரை நீக்க வேண்டும்: சுப்ரீம் கோர்ட்டில் அவசர மனு தாக்கல்..!
17 நிமிடங்கள் சிசிடிவி அணைப்பு? தபால் வாக்குகள் முன்கூட்டியே பிரிப்பு? தேர்தல் ஆணையத்தில் திடுக் புகார்...!
மேற்கு வங்க மாநிலத்தில் வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ள சூழலில், தபால் வாக்குகள் கையாளுதலில் முறைகேடு நடப்பதாக ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி இந்திய தேர்தல் ஆணையத்திடம் புகார் அளித்துள்ளது.
கொல்கத்தாவில் உள்ள வாக்கு எண்ணும் மையத்தில் தபால் வாக்குச்சீட்டு உறைகள் அனுமதியின்றி பிரிக்கப்பட்டதாக சனிக்கிழமை அன்று திரிணாமுல் காங்கிரஸ் குற்றம் சாட்டியது. முன்னதாக, பவானிப்பூர் தொகுதியில் போட்டியிடும் முதல்வர் மம்தா பானர்ஜி, வாக்கு எண்ணும் மையத்தில் முறைகேடு நடப்பதாக கூறி சுமார் 4 மணி நேரம் தர்ணாவில் ஈடுபட்டார்.
மேலும், கொல்கத்தாவில் உள்ள குதிராம் அனுஷீலன் கேந்திரா மையத்தில் சனிக்கிழமை அதிகாலை தபால் வாக்குகள் கொண்ட 8 பெட்டிகள் சிசிடிவி கண்காணிப்பு இல்லாத அறையில் வைக்கப்பட்டு, உறைகள் பிரிக்கப்பட்டதாக அக்கட்சி நிர்வாகிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதேபோல், பராசத் அரசு கல்லூரியில் உள்ள மையத்தில் 17 நிமிடங்கள் சிசிடிவி கேமராக்கள் அணைக்கப்பட்டதாக புகார் எழுந்தது. ஆனால், தேர்தல் அதிகாரிகள் இப்புகாரை மறுத்துள்ளனர்.
சிசிடிவி கேமராக்கள் முறையாக இயங்குவதாகவும், அந்த 17 நிமிட பதிவுகளை எந்த கட்சியினரிடமும் பகிர தயாராக இருப்பதாகவும் அதிகாரிகள் விளக்கம் அளித்துள்ளனர். இச்சம்பவங்களால் மேற்கு வங்கத் தேர்தல் களத்தில் பெரும் பரபரப்பு நிலவி வருகிறது.
Edited by Siva
