செவ்வாய், 23 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By லெனின் அகத்தியநாடன்
Last Modified: சனி, 23 ஏப்ரல் 2016 (14:38 IST)

அட கொடுமையே! - தண்ணீர் எடுக்க செல்லும் மக்களை கட்டுப்படுத்த 144 தடை உத்தரவு

மஹாராஷ்டிரா மாநிலத்தில் கடும் வறட்சி நிலவுவதால் மக்கள் தண்ணீர் நிலைகள் இருக்கும் பகுதி நோக்கி படையெடுக்கின்றனர். இந்நிலையில் கூட்டத்தை கட்டுப்படுத்தி சட்ட ஒழுங்கை நிலை நாட்ட மஹாராஷ்டிரா மாநில அரசு சில பகுதிகளில் 144 தடை உத்தரவு பிறப்பித்திருக்கிறது.
 

 
மாகராஷ்டிரா மாநிலம் முழுவதும் கடும் வறட்சி நிலவி வருகிறது. இதனால் நிலத்தடி நீர் குறைந்து கொண்டே வருகிறது. அணைகளில் நிர் மட்டம் 50 சதவிகிதத்திற்கு மேல் குறைந்திருக்கிறது. நிலத்தடி நீரின் அளவு கடுமையாகக் குறைந்து வருவது சுகாதாரப் பிரச்சனைகளையும் தற்போது உருவாக்கியுள்ளது.
 
சுமார் 1650 கிராமங்களுக்கு 2 ஆயிரம் டேங்கர் லாரிகள் மூலம் தண்ணீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. இந்த டேங்கர்களில் வரும் தண்ணீரும் சுகாதாரமற்ற முறையில் மாசடைந்து இருப்பதால், அந்த தண்ணீரை பருகும் கிராம மக்களுக்கு நீர் தொடர்பான தொற்று நோய்கள் உருவாகி வருவதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
 
இந்நிலையில் குடிநீருக்கே கடும் தட்டுப்பாடு ஏற்பட்டிருக்கும் நிலையில் அணைகளில் உள்ள நீரை பாசனத்திற்கு பயன்படுத்த தடை விதிக்கப்பட்டிருக்கிறது. மேலும் தண்ணீர் இருக்கும் பகுதியை நோக்கம் மக்கள் திரண்டு செல்வதால் சட்ட ஒழுங்கு பிரச்னை ஏற்படும் சூழல் நிலவி வருகிறது.
 
இதனை தொடர்ந்து நீர் நிலைகள், நீர்த் தேக்கங்கள் அருகில் 5 நபர்களுக்கும் மேல் கூடமுடியாதபடி சில பகுதிகளில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருக்கிறது.
 
குறிப்பாக குகடி கால்வாய்த் திட்டத்தின் மூலம் புனே, அகமத்நகர் இரண்டுமே தண்ணீர் பெற்று வருகின்றன. இங்கிருக்கும் நரை விவசாயிகள் பாசனத்திற்கு பயன்படுத்தப்படாமல் இருப்பதற்காகவே 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருப்பதாக அதிகாரிகள் தரப்பில் கூறப்படுகிறது.