தொடர்புடைய செய்திகள்
- கோவில் பிரசாதத்தில் தயாரிப்பு தேதி இல்லை.. Expiry தேதி இல்லை.. திருவானைக்காவல் கோவிலில் ரெய்டு விட்ட அமைச்சர் ரமேஷ்..!
- வெஜிடபிள் சாஸ்-க்கு பதிலாக ரசாயனங்கள், அமிலங்கள்.. அதிகாரிகள் ரெய்டில் அதிர்ச்சி தகவல்..!
- கெட்டுப்போன மாவு.. பலமுறை பயன்படுத்தப்பட்ட எண்ணெய்.. சமோசா தயாரித்த 73 வயது நபர் கைது..!
- முட்டை சாப்பிட்டால் புற்றுநோய் வருமா? நாடு முழுவதும் ஆய்வு நடத்த மத்திய அரசு உத்தரவு..!
- எலி எச்சத்துடன் மசாலா பொருட்கள்.. காலாவதியான மஞ்சள்.. அதிரடி ஆய்வில் அதிர்ச்சி..!
வடை, பஜ்ஜி பார்சலுக்கு நியூஸ்பேப்பர் தடை? உணவு பாதுகாப்புத் துறை எச்சரிக்கை!
இந்தியர்களின் பிரியமான மாலை நேர சிற்றுண்டிகளான வடை, பஜ்ஜி, போண்டா போன்றவற்றைச் சுடச்சுட செய்தித்தாளில் மடித்து, அதன் எண்ணெய்யை வடித்து சாப்பிடுவது பலரின் அன்றாட பழக்கமாக உள்ளது. ஆனால், இந்த பழக்கத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் அதிரடி எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளது.
செய்தித்தாள்களில் பயன்படுத்தப்படும் அச்சு மையில் ஈயம், தீங்கு விளைவிக்கும் ரசாயனங்கள் மற்றும் வண்ண நிறமிகள் பெருமளவில் நிறைந்துள்ளன. சூடான மற்றும் எண்ணெய் பலகாரங்களை இதில் வைக்கும்போது, அந்த நச்சு ரசாயனங்கள் உணவோடு கலந்து நம் உடலுக்குள் செல்கின்றன. இதனால் கடுமையான செரிமான கோளாறுகள், சிறுநீரக பாதிப்புகள் ஏற்படுவதுடன், புற்றுநோய் போன்ற உயிரிழப்பு அபாயங்களும் ஏற்படுவதாக மருத்துவ நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.
மேலும், செய்தித்தாள்கள் அச்சிடப்பட்டு கைமாறி வரும்போது தூசி, அழுக்கு மற்றும் கிருமிகளின் புகலிடமாக மாறுகின்றன. எனவே, இனி உணவு பொருட்களை செய்தித்தாளில் பார்சல் செய்யக் கூடாது என வியாபாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இதற்கு மாற்றாக வாழை இலை, பட்டர் பேப்பர் பயன்படுத்துவதே ஆரோக்கியத்திற்கு சிறந்தது.
Edited by Siva
அடுத்த கட்டுரையில்
