வெள்ளி, 19 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. »
  3. செய்திகள்
  4. »
  5. தேசியச் செய்திகள்
Written By Veeramani
Last Modified: வெள்ளி, 9 மே 2014 (17:46 IST)

காஷ்மீரில் தேர்தலை புறக்கணிக்க மறுத்த வாக்காளர்கள் மீது தாக்குதல்

காஷ்மீரில் தேர்தலை புறக்கணிக்க மறுத்த வாக்காளர்களை பிரிவினைவாத அமைப்பினர் அடித்து உதைத்து தாக்குதல் நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஜம்மு காஷ்மீர் மாநிலம் பாரமுல்லா தொகுதியில் நேற்று முன்தினம் தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலை புறக்கணிக்க வேண்டும் என்று பிரிவினைவாத குழுக்கள் அழைப்பு விடுத்தனர். இந்த அழைப்பை பல்வேறு பகுதிகளில் உள்ள வாக்காளர்கள் புறக்கணித்ததுடன், தங்கள் வாக்குகளை பதிவு செய்தனர்.
 
இந்நிலையில், சோபோர், பாரமுல்லா நகரங்களில் தேர்தலை புறக்கணிக்க மறுத்த வாக்காளர்களை நேற்று பிரிவினைவாத குழுவினர் அடித்து உதைத்தனர். சாலைகளில் நடந்துசென்ற மக்களின் விரல்களில் அழியாத மை இருந்தால் அவர்களை தாக்கியுள்ளனர்.
 
வாக்காளர்களை அச்சுறுத்தும் நபர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று முதல்வர் உமர் அப்துல்லா எச்சரித்ததையும் மீறி இந்த சம்பவம் நடந்துள்ளது.
 
இந்த சம்பவங்களைத் தொடர்ந்து பாரமுல்லா மாவட்டத்தில் கூடுதலாக காவல்துறையினர் குவிக்கப்பட்டு, பிரச்சனைக்குரிய பகுதிகளில் ரோந்துப் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.