செவ்வாய், 24 ஜூன் 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Mahendran
Last Updated : செவ்வாய், 10 ஜூன் 2025 (13:31 IST)

விஜய் மல்லையாவுக்கு இன்னும் ரூ.7000 கோடி கடன் உள்ளது. இந்திய வங்கிகள் அறிவிப்பு..!

vijay mallya
இந்திய வங்கிகள், "நான் வாங்கிய கடனுக்கு மேல் வசூலித்து விட்டது," என்று விஜய் மல்லையா கூறிய நிலையில், அதை மறுத்த இந்திய வங்கிகள், "இன்னும் ₹7000 கோடி அவர் கடன்தர வேண்டியுள்ளது," என தெரிவித்துள்ளது. இது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 
சமீபத்தில் லண்டனில் பேட்டி அளித்த விஜய் மல்லையா, தாம் வங்கிகளில் ₹6000 கோடி கடன் வாங்கியிருந்ததாகவும், ஆனால் தன்னிடமிருந்து ₹14,000 கோடி வசூல் செய்துவிட்டதாகவும் கூறி, அதற்கான ஆதாரத்தையும் காட்டினார்.
 
வங்கிகள் தரப்பில் இதற்கு மறுப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது. ஸ்டேட் வங்கி, பஞ்சாப் நேஷனல் வங்கி, ஐடிபிஐ வங்கி, பேங்க் ஆப் இந்தியா, பேங்க் ஆப் பரோடா ஆகிய வங்கிகளில் விஜய் மல்லையா பெற்ற கடன் தொகை, வட்டியுடன் சேர்த்து சுமார் ₹18,000 கோடி என்றும், இந்தக் கடன் தொகையில் அவரது சொத்துக்கள் ஏலத்திற்கு வைக்கப்பட்டதில் ₹11,000 கோடி தான் கிடைத்தது என்றும், இன்னும் சுமார் ₹7000 கோடி விஜய் மல்லையாவுக்கு கடனாக உள்ளது என்றும் வங்கிகள் தெரிவித்துள்ளன.
 
ஒரு கடனை திருப்பி செலுத்தும் வரை வட்டியும் அபராதமும் செலுத்த வேண்டும் என்றும், விஜய் மல்லையா இன்னும் கடன்காரர் தான் என்றும் வங்கிகள் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
 
Edited by Mahendran