இதுதான் பசுவை தெய்வமாக மதிப்பதா? : விஷ்வ இந்து பரிஷத் தொண்டர்களின் செயலால்அதிர்ச்சி


Murugan| Last Modified வெள்ளி, 27 நவம்பர் 2015 (12:30 IST)
விஷ்வ இந்து பரிஷத் தொண்டர்கள் பசு மாட்டை காலால் உதைத்து துன்புறுத்தும் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது.

 
 
பசுமாடு என்பது இந்துக்களின் தெய்வம். அதனால் மாட்டுக்கறியை யாரும் உண்ணக்கூடாது என்று விஷ்வ இந்து பரிஷத், இந்து முன்னனி, ஆர்.எஸ்.எஸ் போன்ற இந்து அமைப்புகள் மற்றும் பாஜாக தலைவர்கள் சமீபத்தில் கையெலெடுத்த விவகாரம் நாட்டில் பெரும் எதிர்ப்பையும் சர்ச்சையையும்  சந்தித்தது என்பதுஎல்லோருக்கும் தெரியும்
 
இந்நிலையில், விஷ்வ இந்து பரிஷத் மூத்த தலைவர் சிங்கால் சமீபத்தில் மரணமடைந்தார். அவரின் அஸ்தியை கரைக்கும் நிகழ்ச்சி உத்திரபிரதேச மாநிலம் லக்னோவில் நடைபெற்றது. 
 
அதற்காக இந்து பரிஷத் தொண்டர்கள் ஊர்வலமாக வந்தனர். அப்போது,  ஒரு பசுமாடு குறுக்கே வந்து சாலையில் படுத்து விட்டது. இதனால் கோபமடைந்த அந்த தொண்டர்கள், அந்த பசுவை காலால் உதைத்து அங்கிருந்து அதை கிளப்புவதர்கு முயற்சி செய்தனர்.
 
அவர்கள் பசுவை துன்புறுத்துவது செயல்கள், புகைப்படமாக வெளிவந்துள்ளது. பசுவை தெய்வம் என்றும், மாட்டுக்கறி உண்ணக்கூடாது என்றும் கூறிக்கொள்ளும் இவர்கள், இப்படி பசுவை காலால் உதைத்து துன்புறுவது அவர்களின் கொள்கைக்கே முரண்பாடாக உள்ளது.
 
இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய விஷ்வ இந்து பரிஷத் அமைப்பின் செய்தி தொடர்பாளர் சரத் ஷர்மா  “ இந்த விவகாரத்தில் விஷ்வ இந்து பரிஷத் தொண்டர்கள் யார் ஈடுபட்டிருந்தாலும், அவர்களின் மீது தக்க நடவடிக்கை எடுக்கப்படும். எங்களைப் பொருத்தவரை பசு புனிதாமனது என்ற கொள்கையில் உறுதியாக இருக்கிறோம்” என்று கூறினார்.


இதில் மேலும் படிக்கவும் :