வெள்ளி, 19 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By வீரமணி பன்னீர்செல்வம்
Last Modified: புதன், 16 ஜூலை 2014 (17:44 IST)

ஹபீஸ் சயீத்தை சந்தித்த வேதிக்கை கைது செய்ய வேண்டும் - திக்விஜய் சிங் ஆவேசம்

ஐ.எஸ்.ஐ. அனுமதியின்றி பாகிஸ்தான் தீவிரவாதி ஹபீஸ் சயீத்தை சந்தித்த வேதிக்கை உடனடியாக கைது செய்ய வேண்டும் என்று திக்விஜய் சிங் கூறியுள்ளார்.
 
தீவரவாதி ஹபீஸ் சயீத்தை வேதிக் சந்தித்தது பற்றி காங்கிரஸ் தலைவர் திக் விஜய் சிங் கூறியதாவது:–
 
தீவிரவாதி ஹபீஸ் சயீத் மும்பை தாக்குதல் வழக்கில் தேடப்படும் குற்றவாளி. பாகிஸ்தானில் தலைமறைவாக இருக்கும் அவரை பாகிஸ்தானின் உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐ. அனுமதியின்றி யாரும் சந்திக்க முடியாது.
 
ஹபீசை வேதிக் சந்தித்ததில் பல்வேறு மர்மங்கள் உள்ளன. எனவே வேதிக்கை உடனடியாக கைது செய்ய வேண்டும். இந்த விஷயத்தில் பாஜக அரசு இரட்டை வேடம் போடுகிறது. இதுபற்றி நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் விவாதிக்க வேண்டும் என்று திக்விஜய் சிங் கூறினார்.
 
சிவசேனா கட்சி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:–
 
ஹபீஸ் சயீத்தை காங்கிரஸ் ஆட்சியின்போது வேதிக் சந்தித்திருந்தால் பாஜக கடுமையாக அரசை எதிர்த்திருக்கும். ஆனால் நாம் இப்போது அதிகாரத்தில் இருக்கிறோம். எனவே இதில் அரசு ஒன்றும் செய்ய முடியாது என்று கூறுவது சரியல்ல. இந்தப் பிரச்சனையில் கீழ் மட்டத்திலிருந்து ஆராய வேண்டும்.
 
தேசிய பாதுகாப்பில் இந்து, முஸ்லீம் என்ற பாகுபாடு கூடாது என்று பத்திரிகையாளர் செல்வார். ‘நாளை யார் வேண்டும்மானாலும் சென்று தாவூத் இப்ராகிமையோ, டைகர் மேமனையோ, சயீத்தையோ சந்தித்து விருந்து சாப்பிடுவார்கள்’ எனவே இதில் தனிப்பட்டவர் மீது பாகுபாடு காட்டக் கூடாது.
 
இவ்வாறு சிவசேனா அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.