வியாழன், 18 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Ashok
Last Updated : சனி, 12 செப்டம்பர் 2015 (20:10 IST)

உத்தர பிரதேசத்தில் பச்சிளம் குழந்தையை ஏலம் விட்ட போலி மருத்துவர் கைது

உத்தர பிரதேசம் மாநிலம் முசாபர்நகரில் பிரசவத்துக்காக சென்றிருந்த பெண்ணிற்கு திருமணமாகாமல் குழந்தை பிறந்துள்ள நிலையில், அந்த குழந்தையை ஏலம் விட்ட போலி மருத்துவரை போலீஸார் கைது செய்தனர். 

உத்தர பிரதேசம் மாநிலம் முசாபர்நகரில் பிரசவத்துக்காக சென்றிருந்த பெண்னிற்கு திருமணமாகாமல் குழந்தை பிறந்துள்ளது. இந்த விஷயம் தெரிந்துகொண்ட அவரிடைய சமுதாயத்தைச் சேர்ந்த மருத்துவர் ஜித்தேந்திரா சவுத்ரி நம் சமூகம் உன்னையும், உன் குழந்தையையும் ஏற்காது என்று பயமுறுத்தியுள்ளார்.இதனால் தன்னுடைய குழந்தையை மருத்துவமனையிலேயே விட்டுச் சென்றுள்ளார்.

அந்தப் பெண் சென்றபின், குழந்தை இல்லாத, தம்பதிகளுக்கு தொலைபேசியில் தொடர்புக்கொண்டு 'ஒரு குழந்தை இருக்கிறது,ஏலம் அதிகமாக கேட்பவருக்கு குழந்தை வழங்கப்படும்' என தகவல் தெரிவித்துள்ளார்
இந்நிலையில் ஏலத்தில் அதிகபட்சமாக,ரூபாய் 50 ஆயிரம் கேட்ட தம்பதிக்கு குழந்தையை கொடுத்துள்ளார். இந்த ஏலத்தில் பங்கேற்ற கலீம் அகமது, தன்னிடம் வெறும் 20 ஆயிரம் ரூபாயை வைத்திருந்ததால், அந்தக் குழந்தையை கிடைக்கவில்லை.

இதனால் ஆத்திரமடைந்த கலீம் அகமது, அந்த மருத்துவர் மீது பக்கதில் இருந்த காவல்நிலையத்தில் ஏல விவகாரம் தொடர்பாக புகார் கொடுத்துள்ளார்.இதைத்தொடர்ந்து, குழந்தையை கடத்தி ஏலம் விட்ட குற்றத்திற்காக மருத்துவர் ஜித்தேந்திராவை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

குழந்தையின் தாயை இதுவரை கண்டுபிடிக்க முடியவில்லை என்றும் கலீம் ஜித்தேந்திரா போலி மருத்துவர் என்றும் முசாபர்நகர் காவல்துறையினர் தெரிவித்தனர்.மேலும், மருத்துவராக ஜித்தேந்திரா பட்டம் பெற்றதற்கு எவ்வித ஆதாரமும் கிடைக்கவில்லை என காவல்துறையினர் கூறியுள்ளனர்.உத்தர பிரதேசத்தில் பச்சிளம் குழந்தையை ஏலம் விட்ட போலி மருத்துவர் கைது.