1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Murugan
Last Modified: புதன், 8 ஜூன் 2016 (07:44 IST)

இந்தியாவில் கொள்ளையடிக்கப்பட்ட 200 பழங்கால சிலைகள் மோடியிடம் ஒப்படைப்பு

இந்தியாவின் உள்ள பல்வேறு நகரங்களில் இருந்து கோவிலிருந்து திருடப்பட்ட பழங்காலத்து சிலைகள் மற்றும் கலைப்பொருட்களை அமெரிக்கா இந்திய பிரதமர் மோடியிடம் ஒப்படைத்துள்ளது.


 

 
பிரதமர் மோடி தற்போது அமெரிக்காவில் சுற்றுப்பயணம் செய்து வருகிறார். சமீபத்தில் அவர் வாஷிங்டன் நகரில் நடந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அப்போது இந்தியாவில் இருந்து  திருடப்பட்ட பழங்காலத்து சிலைகள் உட்பட 200 கலைப்பொருட்கள் அவரிடம் ஒப்படக்கப்பட்டன.
 
அந்த சிலைகளின் மதிப்பு 100 மில்லியன் அமெரிக்க டாலர்கள் ஆகும். அவைகள் எல்லாம் இந்தியாவின் பல வழிபாட்டுத் தளங்களில் இருந்து திருடப்பட்ட பொருட்கள் ஆகும். தமிழகத்தின் பழமையான வழிபாட்டுத் தளங்களில் இருந்து திருடப்பட்ட ஐம்பொன் மற்றும் வெண்கல சாமி சிலைகள் அமெரிக்கா மற்றும் பல்வேறு ஐரோப்பிய நாடுகளுக்கு கடத்திச் செல்லப்பட்டன. அவைகள் பறிமுதல் செய்யப்பட்டு தற்போது மோடியிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
 
முக்கியமாக, சென்னையில் உள்ள ஒரு சிவன் கோவிலில் இருந்து திருடப்பட்ட சோழர் காலத்து மாணிக்கவாசகர் சிலையும் அதில் அடக்கம். மேலும் 1000 ஆண்டு பழமை வாய்ந்த வெண்கலத்தால் ஆன விநாயகர் சிலையும் அதில் இருந்தது. 
 
சிலைகளை பெற்றுக் கொண்ட மோடி பேசிய போது “இந்திய சிலைகள் ஒப்படைக்கப்பட்ட விவகாரம்,  இந்தியா-அமெரிக்கா இடையேயான கலாசார உறவில் மிகப்பெரிய இணைப்பை ஏற்படுத்துவதாக அமைந்து இருக்கிறது.
 
இந்த பொக்கிஷங்களை இந்தியாவுக்கு திருப்பி அனுப்பி வைப்பதற்காக அமெரிக்க ஜனாதிபதி ஒபாமாவுக்கு மிக்க நன்றி. இதன் மூலம் எங்களின் கடந்த காலம் எங்களுடன் இணைந்து இருக்கிறது. சிலர் இந்த கலைப்பொருட் களை பணரீதியாக மதிப்பீடு செய்யலாம். அவை பல லட்சம் இருக்கும் என்றும் கூறலாம். 
 
எங்களைப் பொறுத்தவரை எங்களின் கடந்த கால கலாசாரமும், பாரம்பரியமும் எங்களுடன் இணைந்து இருக்கிறது. எங்களின் மதிப்பை உயர்த்தி உள்ளது” என்று கூறினார்.