1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
  4. Unsanitary Samosa Manufacturing Unit Busted in Hyderabad: Rs 5 Lakh Worth Contaminated Food Seized

கெட்டுப்போன மாவு.. பலமுறை பயன்படுத்தப்பட்ட எண்ணெய்.. சமோசா தயாரித்த 73 வயது நபர் கைது..!

தமிழ்
ஹைதராபாத் ஜியாகுடா பகுதியில் மிகவும் சுகாதாரமற்ற முறையில் இயங்கி வந்த சட்டவிரோத சமோசா தயாரிப்பு ஆலையை உணவு கலப்பட கண்காணிப்பு குழு   மற்றும் போலீசார் இணைந்து அதிரடியாக முறியடித்தனர். 
 
மார்ச் 20 அன்று நடத்தப்பட்ட இந்த சோதனையில், 73 வயதான அப்துல் ரஷீத் என்பவர் முறையான உரிமம் இன்றி இந்த ஆலையை நடத்தி வந்தது தெரியவந்தது. கெட்டுப்போன முட்டைகள் மற்றும் பலமுறை பயன்படுத்தப்பட்ட சமையல் எண்ணெயை பயன்படுத்தி சமோசாக்கள் தயாரிக்கப்பட்டது அதிகாரிகளை அதிர்ச்சியில் ஆழ்த்தியது.
 
இந்த சோதனையின் போது சுமார் ரூ.5 லட்சம் மதிப்புள்ள கலப்பட உணவு பொருட்கள், இயந்திரங்கள் மற்றும் மூலப்பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. எப்.எஸ்.எஸ்.ஏ.ஐ உரிமம் மற்றும் தீயணைப்பு பாதுகாப்பு அனுமதி ஏதுமின்றி, பொதுமக்களின் உயிருக்கு ஆபத்து விளைவிக்கும் வகையில் இந்த ஆலை செயல்பட்டுள்ளது. 
 
குற்றம் சாட்டப்பட்ட நபர் கைது செய்யப்பட்டு, அவர் மீது உணவு பாதுகாப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. பொதுமக்கள் தங்கள் பகுதிகளில் இது போன்ற சுகாதாரமற்ற உணவு தயாரிப்பு முறைகளைக் கண்டால் உடனடியாக புகார் அளிக்குமாறு காவல்துறை கேட்டுக்கொண்டுள்ளது. 
 
இச்சம்பவம் தெருவோர உணவுகளின் தரம் குறித்த பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது.
 
Edited by Siva
அடுத்த கட்டுரையில்
ரூ.15,000 சம்பாதித்தபோது இருந்த மகிழ்ச்சி, ரூ.2.5 லட்சம் சம்பாதிக்கும்போது இல்லை.. ஒரு பெண்ணின் வைரல் பதிவு..!