செவ்வாய், 16 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By K.N.Vadivel
Last Updated : ஞாயிறு, 9 ஆகஸ்ட் 2015 (04:28 IST)

கேரளாவில் அமைச்சர் ஸ்மிருதி இரானிக்கு கருப்புக்கொடி காட்டி போராட்டம் நடத்திய காங்கிரஸார்

அகில இந்திய காங்கிரஸ் கட்சித் தலைவர் சோனியா காந்தியை விமர்சனம் செய்த மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானிக்கு கேரளாவில் காங்கிரஸ் கட்சியினர் கருப்புக்கொடி காட்டி போராட்டம் நடத்தினர்.
 

 
ஐ.பி.எல். முன்னாள் தலைவர் லலித் மோடிக்கு, மத்திய அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் மற்றும் ராஜஸ்தான் முதலமைச்சர் வசுந்தரா ராஜே சிந்தியா ஆகியோர் உதவி செய்ததாகக் கூறியும், சில பிரச்சனைகளை முன்வைத்தும், காங்கிரஸ் எம்.பிக்கள் மக்களவையை முடக்கி வருகின்றனர்.
 
இதனால், காங்கிரஸ் கட்சி சேர்ந்த 25 எம்.பி.க்களைச் சஸ்பென்ட் செய்து மக்களவை சபாநாயகர் சுமித்ரா மகாஜன் உத்தரவிட்டார்.
 
இதனைக் கண்டித்து, காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, துணைத் தலைவர் ராகுல் காந்தி, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் உள்ளிட்ட காங்கிரஸ் தலைவர்கள் எம்.பி.க்கள் நாடாளுமன்ற வளாகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
 
மேலும், காங்கிரஸ் கட்தித் தலைவர் சோனியா காந்தி, அவரது மகன் ராகுல் காந்தி ஆகியோர் மத்திய அமைச்சர் சுஷ்மா மீது கடும் விமர்ச்சனம் வைத்தனர். இதற்குப் பதிலடி கொடுக்கும் வகையில் சோனியா காந்தியையும், ராகுல் காந்தியையும் மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி கடும் விமர்ச்சனம் செய்தார்.
 

 
இந்த நிலையில், கேரளாவில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்க மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி வருகை தந்தார். இதை அறிந்த, இளைஞர் காங்கிரசார் திருவனந்தபுரத்தில் கருப்புக் கொடி போராட்டம் நடத்தினர். போராட்டத்தில், ஈடுபட்ட காங்கிரசாரை போலீசார் கைது செய்தனர்.
 
ஆகஸ்ட் 7ஆம் தேதி தமிழகம் வந்த பிரதமர் நரேந்திர மோடிக்குத் தமிழகக் காங்கிரஸார் கருப்புக்கொடி காட்டி போராட்டம் நடத்தினார்கள். ஆகஸ்ட் 8ஆம் தேதி திருவனந்தபுரம் வந்த மத்திய அமைச்சர் ஸ்மிருதி ரானிக்கு காங்கிரஸார் கருப்புக் கொடி காட்டி போராட்டம் நடத்தியுள்ளது குறிப்பிடதக்கது.