தொடர்புடைய செய்திகள்
- AI டெக்னாலஜிக்கு முழுக்க முழுக்க மாறப்போகும் IBM.. ஆயிரக்கணக்கோர் வேலைநீக்கம்?
- சாம்சங் கேலக்ஸி AI-இல் குஜராத்தி உள்பட 22 மொழிகள்.. மேலும் என்னென்ன வசதிகள்?
- ஏஐ தொழில்நுட்பம் ரொம்ப ஆபத்தானது: நடிகை நிவேதா பெத்துராஜ்
- சர்க்கரை நோய் பாதிப்புகளை முன்கூட்டியே கண்டறிய ஏ.ஐ. ஆய்வு!
- விக்கிப்பீடியாவுக்கு பதில் இன்னொரு தளம்.. எலான் மஸ்க்கின் ஏஐ தொழில்நுட்ப 'க்ரோக்கிப்பீடியா' அறிமுகம்!
22 ஆண்டுகளில் இல்லாத அதிக பணிநீக்கம்: அக்டோபரில் மட்டும் 1.5 லட்சம் பேர் வேலை இழப்பு..!
அமெரிக்காவை மையமாக கொண்ட நிறுவனங்கள், செலவு குறைப்பு மற்றும் செயற்கை நுண்ணறிவின் தாக்கம் காரணமாக அக்டோபர் மாதத்தில் மட்டும் 1,53,074 பேரை பணிநீக்கம் செய்துள்ளன. இது கடந்த 22 ஆண்டுகளில் இல்லாத அதிகபட்ச மாதாந்திர பணிநீக்க எண்ணிக்கையாகும்.
சேலஞ்சர் கிரே & கிறிஸ்துமஸ் நிறுவனத்தின் ஆய்வின்படி, இந்த பணிநீக்கம் செப்டம்பர் மாதத்தைவிட 183% அதிகமாகும். நடப்பாண்டில் இதுவரை ஏற்பட்ட மொத்த பணி இழப்பும் கடந்த ஆண்டை காட்டிலும் 44% உயர்ந்துள்ளது.
அக்டோபர் பணிநீக்கங்களில், 47,878 பேருடன் கிடங்குத் துறை (Warehousing) முன்னிலை வகிக்கிறது. அதை தொடர்ந்து, தொழில்நுட்பத் துறையில் AI-ன் காரணமாக 33,281 பேர் வேலை இழந்துள்ளனர். ஊடகம், சில்லறை விற்பனை மற்றும் சேவை துறைகளிலும் குறிப்பிடத்தக்க வேலை இழப்புகள் ஏற்பட்டுள்ளன.
Edited by Mahendran
