ரயிலிருந்து இளம்பெண்ணை தள்ளிவிட்ட டிக்கெட் பரிசோதகர்


வீரமணி பன்னீர்செல்வம்| Last Modified செவ்வாய், 11 ஆகஸ்ட் 2015 (20:00 IST)
ஒடிசா மாநிலம் சாம்பல்பூரில் பயணச்சீட்டு இல்லாததால் ரயிலிருந்து இளம்பெண் தள்ளிவிடப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 
 
ஒடிசாவில் நடைபெற்ற கன்வாத் யாத்திரை நிகழ்ச்சியில், ரேகா நாயக் என்ற பெண் பங்கேற்றுவிட்டு ரயிலில் வீடு திரும்பிக்கொண்டிருந்தார். அப்போது, ரயில் பயணச்சீட்டை காண்பிக்குமாறு பரிசோதகர் கேட்டுள்ளார்.
 
ஆனால் பயணச்சீட்டை தொலைத்துவிட்டதாக ரேகா கூறியுள்ளார். இதனால், கோபமடைந்த அந்த பரிசோதகர் அவரை ரயிலிருந்து கீழே தள்ளியதாக கூறப்படுகிறது.
 
இதில் கால், தலை, முகத்தில் பலத்த காயங்கள் ஏற்பட்டது. இதையடுத்து, ரேகா நாயருக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இச்சம்பவம் குறித்து ரயில்வே போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


இதில் மேலும் படிக்கவும் :