சீனா, பாகிஸ்தான், பங்களாதேஷை விட இந்தியாவுக்கு வரி குறைவு.. டிரம்ப் முடிவால் ஏற்படும் பயன்கள்..!
அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், இந்திய பொருட்களுக்கான இறக்குமதி வரியை 50 சதவீதத்திலிருந்து 18 சதவீதமாக குறைப்பதாக அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
ரஷியாவிடமிருந்து கச்சா எண்ணெய் வாங்கியதற்காக விதிக்கப்பட்ட 25 சதவீத கூடுதல் அபராத வரி நீக்கப்பட்டதே இந்த பாரிய மாற்றத்திற்கு காரணம். இதன் மூலம், வங்கதேசம் (20%), வியட்நாம் (20%) மற்றும் சீனா (37%) போன்ற அண்டை நாடுகளை விட, அமெரிக்கச் சந்தையில் இந்திய பொருட்களுக்குப் பெரும் சாதகமான சூழல் உருவாகியுள்ளது.
பிரதமர் மோடியுடன் பேசிய பிறகு இந்த அறிவிப்பை வெளியிட்ட ட்ரம்ப், ரஷிய எண்ணெய்க்கு பதில் அமெரிக்கா மற்றும் வெனிசுலாவிலிருந்து இந்தியா எண்ணெய் வாங்குவது உக்ரைன் போரை முடிக்க உதவும் என்று குறிப்பிட்டுள்ளார்.
பிரதமர் மோடி தனது நன்றியை தெரிவித்ததுடன், இது 'மேக் இன் இந்தியா' தயாரிப்புகளுக்கு பெரும் ஊக்கமளிக்கும் என்று கூறியுள்ளார். ஜப்பான், ஐரோப்பிய நாடுகளுக்கு நிகரான குறைந்த வரி விகிதத்தை இந்தியா பெற்றுள்ளது இரு நாடுகளின் வர்த்தக உறவில் புதிய மைல்கல்லாகும்.
Edited by Siva