வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Ashok
Last Updated : சனி, 5 டிசம்பர் 2015 (12:46 IST)

சென்னையில் விமானம் இயக்கப்படுவதில் சிக்கல்

விமான நிலையத்தில் மின்சார கேபிள்கள் இருந்த கட்டுப்பாட்டு அறையில் புகுந்த மழை நீரை வெளியேற்றுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதனால் விமான சேவை தொடங்குவதில் சிக்கல் நீடித்து வருவதாக வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.


 
 
வரலாறு காணாத வடக்கிழக்கு பருவமழையின் காரணமாக வெள்ளத்தால் அண்மையில் சென்னை விமான நிலையத்திற்குள் தண்ணீர் புகுந்தது. இதையடுத்து சென்னையிலிருந்து புறப்படும் அனைத்து விமான சேவைகளும் 6 ஆம் தேதி வரை ரத்து செய்யப்படும் என்றும் அதுவரை அரக்கோணம் ராஜாளி கடற்படை விமான தளம் தற்காலிக பயணிகள் விமாண நிலையமாக செயல்படும் என்று  இந்திய விமான ஆணையம் அறிவித்தது.
 
விமான நிலையத்தில் மின்சார கேபிள்கள் இருந்த கட்டுப்பாட்டு அறையில் புகுந்த மழை நீரை வெளியேற்றுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதனால் விமான சேவை தொடங்குவதில் சிக்கல் நீடித்து வருவதாக வருவதாக விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
 
இதனிடையே வெள்ளத்தால் சென்னை விமானநிலையத்தில், கடந்த 4 நாட்களுக்கும் மேலாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 18 விமானங்களும் டெல்லி, ஹைதராபாத் உள்ளிட்ட பல்வேறு நகரங்களுக்கு இன்று அதிகாலை அனுப்பி வைக்கப்பட்டுள்தாக கூறப்படுகிறது.
 
இதுகுறித்து செய்தியாளர்களிடம் கூறிய போக்குவரத்து துறை இணை அமைச்சர் மகேஷ் ஷர்மா “விமான நிலையத்தில் வெள்ளம் வடிய தொடங்கினாலும், உடனடியாக விமானத்தை இயக்க முடியாது என்றும் மின்சார கட்டுப்பாட்டு அறைக்குள் தண்ணீர் புகுந்துள்ளதால் விமானம் இயக்கப்படுவதில் சிக்கல் நீடித்து வருகிறது என்றும் தேவைகள் முழுவதும் சீரான பிறகுதான் விமான சேவை தொடங்கும் அதற்கு இன்னும் இரண்டு நாட்கள் ஆகலாம் ” என்றும் அவர் குறிப்பிட்டார்.
 
வெள்ளத்தில் நிறைய பாம்புகள் அடித்து வரப்பட்டு விமானங்களூக்குள் புகுந்து விட்டதால், பாதுகாப்பு நிலை உறுதிப்படுத்தப்பட்ட பின்னரே சென்னை விமான நிலையம் செயல் பட துவங்கும் என்றும் அவர் குறிப்பிட்டார்.