டெல்லியில் அதிகாலை நடந்த கோர விபத்து.. 12 வயது சிறுவன் உள்பட 3 பேர் பலி..!
டெல்லியில் இன்று அதிகாலை நடந்த கோர விபத்தில், இருசக்கர வாகனத்தில் பயணித்த மூன்று பேர் உயிரிழந்தனர். இந்த விபத்து ஒரு வாகனம் மோதிவிட்டு நிற்காமல் சென்ற விபத்தாக இருக்கலாம் என டெல்லி காவல்துறை தெரிவித்துள்ளது.
டெல்லி காவல்துறையின் கூற்றுப்படி, இன்று அதிகாலை 12:05 மணியளவில் ஜஹாங்கீர்புரி காவல் நிலையத்திற்கு ஒரு சாலை விபத்து குறித்து தகவல் கிடைத்தது. சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர், இருசக்கர வாகனத்தில் பயணித்த மூன்று பேர் விபத்தில் உயிரிழந்ததை கண்டனர்.
சம்பவம் நடந்த இடத்திற்கு அருகில் எந்த சிசிடிவி கேமராவும் கண்டறியப்படவில்லை. இருப்பினும், விபத்துக்கான தடயங்கள் அல்லது காணொளி ஆதாரங்கள் ஏதேனும் கிடைக்கிறதா என அந்த பகுதியில் முழுமையாக ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. விபத்தை நேரில் பார்த்த சாட்சிகள் யாரும் சம்பவ இடத்தில் இல்லை என்று காவல்துறை தெரிவித்துள்ளது.
உயிரிழந்தவர்கள் ஷாஹித் , ஃபைஸ்), மற்றும் ஹம்சா என அடையாளம் காணப்பட்டுள்ளனர். இவர்களில் ஹம்சா 12 வயதுடையவர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தச் சம்பவம் தொடர்பாக ஜஹாங்கீர்புரி காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
Edited by Mahendran