1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
  4. Tragic Helicopter Crash in Nepal Claims Life of Chennai Tourist Near Everest

நேபாளத்தில் 2 ஹெலிகாப்டர்கள் மோதி விபத்து.. சென்னையை சேர்ந்தவர் பலி...

நேபாள ஹெலிகாப்டர் விபத்து
நேபாளத்தில் நிகழ்ந்த அதிர்ச்சிகரமான ஹெலிகாப்டர் விபத்தில் சென்னையை சேர்ந்த சுற்றுலா பயணி ஒருவர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 
 
நேபாள நாட்டின் சோலுகும்பு மாவட்டம் எவரெஸ்ட் சிகர பகுதிக்கு அருகில் உள்ள பெரிச்சே என்னுமிடத்தில், தனியார் நிறுவனங்களுக்கு சொந்தமான இரண்டு ஹெலிகாப்டர்கள் தரையிறங்க முயன்றபோது எதிர்பாராதவிதமாக ஒன்றோடு ஒன்று மோதி விபத்துக்குள்ளாகின.
 
இந்த கோர விபத்தில் ஃபிஷ்டெயில் ஏர் ஹெலிகாப்டரில் பயணித்த சென்னையை சேர்ந்த வசந்தகுமார் என்பவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். மேலும், நியூசிலாந்தை சேர்ந்த இந்தியரான ஷைலேஷ் குமார் படேல் மற்றும் விமானி ரவீந்திர பிரஜாபதி உள்ளிட்ட மூன்று பேர் படுகாயமடைந்தனர். தகவல் அறிந்தவுடன் மீட்புக்குழுவினர் உடனடியாக விரைந்து சென்று, காயமடைந்தவர்களை மீட்டு காத்மாண்டுவில் உள்ள மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.
 
விபத்தில் பலியான வசந்தகுமாரின் உடல் மீட்கப்பட்டு லுக்லாவில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. எவரெஸ்ட் சிகர பகுதியை சுற்றி பார்க்க சென்ற சுற்றுலா பயணி ஒருவர் இயற்கை எய்திய இச்சம்பவம் அவரது குடும்பத்தினரையும், சென்னை மக்களையும் பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
About Writer
SIVA
வெப்துனியாவில் 10 ஆண்டுகளுக்கும் மேல் பணிபுரிந்து வருகிறேன். அரசியல் செய்திகள், பொழுதுபோக்கு, டெக்னாலஜி, மருத்துவம், பிசினஸ் செய்திகள் எழுதுவேன்..... Read More
அடுத்த கட்டுரையில்
நான் தோத்துப்போனாலும் வீட்டோவை பயன்படுத்தி தடுப்பேன் - அடங்காத டிரம்ப்..