வெள்ளி, 19 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Updated : வியாழன், 21 மே 2020 (08:38 IST)

கொரோனா ஊரடங்கு… திருப்பதி லட்டு விற்பனை தொடக்கம்- விலையில் அதிரடி மாற்றம்!

கொரோனாவால் ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் திருப்பதி ஏழுமலையான் கோயில் மூடப்பட்டுள்ளது.

கொரோனா ஊரடங்கால் திருப்பதி தேவஸ்தானத்துக்குப் பல கோடி ரூபாய் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. இதனால் 4000 ஊழியர்களுக்கு சம்பளம் வழங்கமுடியாது என அறிவித்ததாக சர்ச்சைக் கிளம்பியது. இந்நிலையில் திருப்பதி தேவஸ்தானம் ஒரு அதிரடி முடிவை எடுத்துள்ளது.

தேவஸ்தான அறங்காவலா் குழுத் தலைவா் சுப்பா ரெட்டி வெளியிட்டுள்ள அறிவிப்பில் ‘அதில் ஏழுமலையான்  தரிசனம் கிடைக்காத நிலையில், ஏழுமலையானின் பிரசாதத்தையாவது அளிக்க வேண்டும் என பக்தா்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். அதையடுத்து 50 ரூபாய் விலையுள்ள லட்டு மானிய விலையில் 25 ரூபாய்க்கு விற்கப்படும். ஊரடங்கு முடியும் வரை இந்த விலைக் குறைப்பு அமலில் இருக்கும். இது ஆந்திராவில் மட்டுமல்லாமல் சென்னை உள்ளிட்ட அண்டை மாநில நகரங்களிலும் கிடைக்கும்.

முன்பு மோல் அளவு இல்லாமல் எத்தனை லட்டுகளை வேண்டுமானாலும் ஒருவர் வாங்கிக் கொள்ளலாம். இன்னும் ஓரிரு தினங்களில் லட்டு விற்பனைத் தொடங்கும்’ என அறிவித்துள்ளார்.