திருப்பதி வெங்டாஜலபதியை பார்க்க வேண்டுமா? ஆதார் எண் முக்கியம்

திருப்பதி வெங்டாஜலபதியை பார்க்க வேண்டுமா? ஆதார் எண் முக்கியம்


கே.என்.வடிவேல்| Last Modified சனி, 12 மார்ச் 2016 (02:42 IST)
திருப்பதி வெங்டாஜலபதியை தரிசனம் செய்ய செல்லும் பக்தர்கள் ஆதார் எண் இருந்தால் தான் சுவாமி தரிசனம் செய்ய முடியும்.
 
 
இது குறித்து, திருமலை திருப்பதி தேவஸ்தான முதன்மை நிர்வாக அதிகாரி சாம்ப சிவராவ் செய்தியாளர்களிம்டகூறியதாவது:-
 
திருப்பதி வெங்டாஜலபதி கோவிலில் உள்ளூறைச் சேர்ந்த மக்கள் ஒவ்வொரு மாதத்தின் முதல் செவ்வாய்கிழமை அன்று இலவசமாக தரிசனம் செய்ய அனுமதி அளிக்கப்பட்டு வருகிறது. இவர்களுக்காக ரூ.5 ஆயிரம் டிக்கெட் ஒதுக்கப்படுகிறது.
 
இதனை பயன்படுத்தி, இவர்கள் அடிக்கடி கோவிலுக்கு வருவதை தவிர்க்கவே ஆதார் எண் இணைக்க முடுவு செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக, மாதத்தின் ஒருமுறை சுவாமியை தரிசனம் செய்தவர்கள் மறுமாதம்தான் தரிசனம் செய்ய முடியும்.
 
இந்த புதிய நடைமுறை ஆன்லைனில் வழங்கப்படும் ரூ.300 சிறப்பு தரிசன டிக்கெட்டுக்கு முதல் கட்டமாக அறிமுகப்படுத்தப்படுகிறது என்றார். 


இதில் மேலும் படிக்கவும் :