பிராமணர் அல்லாதோருக்கும் அர்ச்சகர் பயிற்சி: அமைச்சர் மாணிக்கியால வரபிரசாத்

Tirupati
K.N.Vadivel| Last Modified வெள்ளி, 25 செப்டம்பர் 2015 (00:48 IST)
திருப்பதியில் பிராமணர் அல்லாதோருக்கும் அர்ச்சகர் பயிற்சி அளிக்க திருமலை திருப்பதி தேவஸ்தானம் முடிவு செய்துள்ளது.
 
 
இது குறித்து, ஆந்திர மாநில இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் மாணிக்கியால வரபிரசாத் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-
 
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் ஆகம விதிகளின்படி வேத பாடங்கள் பயிற்சி இதுவரை  பிராமணர்களுக்கு மட்டும் அளிக்கப்பட்டு வந்தது.
 
தற்போது, திருமலை - திருப்பதி தேவஸ்தானம் சார்பில் பழங்குடியினத்தவர்களுக்கு குறுகிய கால (3 மாத வேத பாடம்) கற்று தரும் திட்டம் அறிமுகப்பட்டுள்ளது.
 
இந்த நிலையில், தலித் மக்கள், பிற்படுத்தப்பட்டோர் என இந்த திட்டத்தை விரிவாக்கம் செய்ய உள்ளது.  முழு நேர பாடத்திட்டம் கற்றுத் தர உள்ளது.
 
ஆந்திர மாநிலத்தில், கோயில் இல்லாத ஊர்களில் கோயில்கள் கட்டப்படும். அந்த கோயில்களில் வேதகாம பயிற்சி முடித்த இளைஞர்களை அர்ச்சகர்களாக பணியில் அமர்த்தப்படுவர் என்றார். 
 


இதில் மேலும் படிக்கவும் :