இனி, தபால் நிலையங்களிலும் திருப்பதி சிறப்பு தரிசன டிக்கட் கிடைக்கும்


K.N.Vadivel| Last Updated: வியாழன், 6 ஆகஸ்ட் 2015 (04:50 IST)
திருப்பதி வெங்கடாஜலபதியை தரிசனம் செய்ய, தபால் நிலையங்களிலும் சிறப்பு தரிசன டிக்கட்டை பெற்றுக் கொள்ளும் வகையில், நடவடிக்கை எடுக்கப்படும் என திருமலை - திருப்பதி தேவஸ்தான அதிகாரி தெரிவித்துள்ளார்.
 
 
திருமலையில் உள்ள அன்னமைய்யா பவனில் ஆந்திரா, தெலங்கானா மாநில அஞ்சல்துறை அதிகாரிகள் ஆலோசனை கூட்டம், திருமலை - திருப்பதி தேவஸ்தான இணை செயல் அலுவலர் ஸ்ரீனிவாச ராஜூ தலைமையில் நடைபெற்றது.
 
இந்த கூட்டத்தில், திருமலை - திருப்பதி தேவஸ்தான இணை செயல் அலுவலர் ஸ்ரீனிவாச ராஜூ பேசியதாவது:-
 
ஆந்திர மாநிலம், மற்றும் தெலங்கானா மாநிலத்தில் உள்ள அனைத்து தபால் நிலையங்களிலும், ஜனவரி மாதம் 5 ஆம் தேதி முதல், திருப்பதி வெங்கடாஜலபதியை தரிசனம் செய்ய, நாள்தோறும் ரூ.300க்கான சிறப்புத் தரிசன டிக்கெட்களைப் பெற்றுக் கொள்ளலாம்.
 
இந்தத் திட்டத்திற்குப் பொது மக்கள் மத்தியில் கிடைக்கும் வரவேற்பை அடுத்து, நாடு முழுவதும் உள்ள அனைத்து தபால் நிலையங்களிலும் ரூ.300க்கான சிறப்புத் தரிசன டிக்கெட் பெறும் வகையில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். 
 


இதில் மேலும் படிக்கவும் :