வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By வீரமணி பன்னீர்செல்வம்
Last Modified: சனி, 8 ஆகஸ்ட் 2015 (12:57 IST)

ஒரு டன் தங்கத்தை வங்கியில் முதலீடு செய்ய திருப்பதி தேவஸ்தானம் முடிவு

திருப்பதி தேவஸ்தானத்தின் கீழ் செயல்படும் கோவில்களில் உள்ள ஒரு டன் தங்கத்தை வங்கியில் முதலீடு செய்ய தேவஸ்தானம் முடிவு செய்துள்ளதாக கூறப்பட்டுள்ளது.
 

 
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பக்தர்களிடம் தொலைபேசி மூலம் குறை கேட்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் தேவஸ்தான முதன்மை செயல் அலுவலர் சாம்ப சிவா ராவ் கலந்து கொண்டு, பக்தர்களின் குறைகளைக் கேட்டறிந்தார்.
 
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், புதிதாக கட்டப்படும் கோவில்களுக்கு பின்தங்கிய மக்களுக்கு இலவசமாகவும், மற்ற வகுப்பினர்களுக்கு 75 சதவிகித மானியத்துடனும் சிலைகள் வழங்கப்படும் என்று கூறினார்.
 
திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் கீழ் செயல்படும் கோவில்களில் தேவைக்கு அதிகமாக தங்க நகைகள் உள்ளதால், அதனை உருக்கி ஒரு டன் தங்கத்தை வங்கியில் முதலீடு செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளதாக குறிப்பிட்டார்.