1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Mahendran
Last Modified: திங்கள், 5 ஜனவரி 2026 (11:40 IST)

கேரள ரயில் நிலையத்தில் அமைந்துள்ள பயங்கர தீ விபத்து.. 500 பைக்குகள் சாம்பல்..!

கேரள ரயில் நிலையத்தில் அமைந்துள்ள பயங்கர தீ விபத்து.. 500 பைக்குகள் சாம்பல்..!
கேரள மாநிலம் திருச்சூர் ரயில் நிலையத்தில் அமைந்துள்ள வாகன நிறுத்துமிடத்தில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்து, மாநிலம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 
 
நேற்று காலை சுமார் 6:20 மணியளவில், வாகனங்கள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஒரு பகுதியில் திடீரென புகை கிளம்பியுள்ளது. சில நிமிடங்களிலேயே அந்த புகை தீயாக மாறி, அருகில் நிறுத்தப்பட்டிருந்த வாகனங்களுக்கு மளமளவெனப் பரவியது. அதிகாலை நேரம் என்பதால், தீயணைப்புத் துறையினர் வருவதற்குள் தீ கட்டுக்கடங்காமல் பரவி, அந்தப் பகுதியையே கரும்புகை சூழ்ந்தது.
 
தீயணைப்புத் துறையினர் விரைந்து வந்து தீயை அணைக்க போராடிய போதிலும், தீயின் வேகம் மிக அதிகமாக இருந்ததால் 500-க்கும் மேற்பட்ட இருசக்கர வாகனங்கள் முற்றிலும் எரிந்து சாம்பலாகின. "தீயணைப்பு வீரர்கள் கடுமையாகப் போராடியும் ஒரு வாகனத்தை கூட முழுமையாக மீட்க முடியவில்லை" என்று அங்கிருந்தவர்கள் வேதனையுடன் தெரிவித்தனர். இந்த விபத்தினால் பல கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துக்கள் சேதமடைந்துள்ளன.
 
இந்த விபத்து மின் கசிவு காரணமாக ஏற்பட்டதா அல்லது வேறு ஏதேனும் சதிச் செயல் உள்ளதா என்பது குறித்து தீயணைப்புத் துறையினரும், காவல்துறையினரும் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். 
 
Edited by Mahendran