நாயை கொன்று சமைத்த மூன்று மாணவர்கள் கைது

லெனின் அகத்தியநாடன்| Last Modified புதன், 13 மே 2015 (17:24 IST)
பெங்களூரில் நாயை கொன்று சமைத்த குற்றச்சாட்டில் மூன்று மாணவர்களை காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.
பெங்களூரில் பயின்றுவரும் தோல்ஜிட், மைக்கல், ரோமென் எனும் மூன்று மாணவர்களும் 6 மாதங்களுக்கு முன்பிருந்து நாயை செல்லமாக வளர்த்துள்ளனர். இந்நிலையில் கடந்த புதன்கிழமை அதை கொலை செய்து சமைத்துள்ளதாகவும் தெரிய வந்துள்ளது.

இம்மாணவர்கள் தங்கியிருந்த இடத்திலிருந்து துர்நாற்றம் வீசியதையடுத்து இது தொடர்பாக அருகிலிருந்த ஒருவர் விசாரித்துள்ளார். மேலும் இது குறித்து புகாரும் அளித்துள்ளார். இதன் அடிப்படையில் காவல் துறையினர் மூன்று பேரையும் கைது செய்துள்ளனர்.
நாயை கொன்று கறி சமைத்ததை அறிந்ததும், தான் பெரும் அதிர்ச்சியடைந்ததாக புகார் அளித்தவர் தெரிவித்துள்ளார். இவர்கள் நீதிமன்றத்தில் குற்றவாளிகளாக நிரூபிக்கப்பட்டால் 2 வருடகால சிறைத் தண்டனை விதிக்கப்பட வாய்ப்புள்ளதாக தெரிகிறது.


இதில் மேலும் படிக்கவும் :