1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
  4. three people died in manipur in gang gun shoot

மணிப்பூரில் மீண்டும் கலவரம்!.. கர்ப்பிணி பெண் சுட்டுக்கொலை!.. 3 பேர் மரணம்..

manipur
மணிப்பூரில் கடந்த 202ம் வருடம் முதல் மெய்தி மற்றும் குகி ஆகிய இரண்டு சமூகங்களுக்கு இடையே மோதலும் வன்முறையும் தொடர்ந்து வருகிறது. தேர்தல் நடந்து முடிந்து புதிய ஆட்சி வந்த நிலையிலும் வன்முறை நிற்கவில்லை. இதுவரை மணிப்பூரில் ஏற்பட்ட வன்முறையில் 250க்கும் மேற்பட்டோர் இறந்துவிட்டனர்.
 
இந்நிலையில்தான் மணிப்பூர் காங்போக்பி என்கிற மாவட்டத்தில் நேற்று இரவு துப்பாக்கி சூடு நடந்திருக்கிறது. லொய்போல் குல்லன் என்கிற ஒரு கிராமத்திற்குள் அதிகாலை 4 மணி அளவில் புகுந்த ஒரு கும்பல் மூன்று பேரை துப்பாக்கியால் சுட்டு விட்டு தப்பிவிட்டனர். அதில் 7 மாத கர்ப்பிணி பெண் உயிரிழந்தார். அவரின் கணவர் இறந்துபோனார்.
 
இந்த மாவட்டத்தில் குகி மற்றும் நாகா இன மக்கள் அதிகமாக வசித்து வருகிறார்கள். இந்த தாக்குதலை மணிப்பூர் முதலமைச்சர் ஒய்.கே. சிங் கண்டித்துள்ளார். ஏற்கனவே கடந்த மாதம் 13ஆம் தேதி சர்ச் பாதிரியார்கள் மூன்று பேர் கொல்லப்பட்டார்கள். மேலும் நாகாக்கள் ஆறு பேரும், குகிக்கள் 14 பேரும் கடத்தப்பட்டனர்.  தற்போது வரை அவர்கள் கண்டுபிடிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
அடுத்த கட்டுரையில்
போராட்டம் நடத்தும் கரப்பான் பூச்சி ஜனதா கட்சி!.. டெல்லியில் பரபரப்பு!...