1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
  4. this year agust had heavy hot because of el nino

125 ஆண்டுகள் கழித்து உச்சத்தை தொட்ட வெப்பம்.. எல் நினோ வெறியாட்டம்..

el nino
பசிபிக் பெருங்கடலில் நடு மற்றும் கிழக்குப் பகுதியில் கடல் நீரின் மேற்பரப்பு வெப்பநிலை வழக்கத்தைவிட அதிகமாக மாறும் ஒரு இயற்கையான பருவநிலை மாற்றத் தோற்றப்பாடுதான் எல் நினோ என அழைக்கப்படுகிறது.

பசிபிக் பெருங்கடலில் காற்று வழக்கமான திசைக்கு மாறாக பலவீனமடைவதால் அல்லது திசைமாறுவதால் எல் நினோ உருவாகிறது. எல் நினோ உலகளாவிய வானிலை, காற்று மற்றும் மழைப்பொழிவை கடுமையாகப் பாதிக்கிறது. அதோடு, பல பகுதிகளில் வறட்சி, கடுமையான வெயில் மற்றும் மழை பெய்யாமல் போவதற்கும் எல் நினோ காரணமாக இருக்கிறது.

அதோடு, விவசாயத்திலும் பெரிய பாதிப்பை ஏற்படுத்துகிறது. வெயில் காரணமாக பயிர்கள் காய்ந்துபோய் விவசாயம் கடுமையாகப் பாதிக்கப்படுகிறது. இதனல, உணவு உற்பத்தியில் பாதிப்பு ஏற்படுகிறது. உலக வெப்பநிலை உயர்வதோடு தீவிர வெப்ப அலைகளையும் ஏற்படுத்துகிறது.  

இந்நிலையில்தான், 1901 வருடத்திற்கு பின் 125 வருடங்கள் கழித்து இந்த வருடம் ஆகஸ்ட் மாதத்தில் பதிவான வெப்பம் புதிய உச்சத்தை தொட்டிருக்கிறது. எல் நினோ தாக்கத்தால் ஆகஸ்ட் மாதத்தில் நாட்டின் சராசரி வெப்பநிலை 28.01 டிகிரி செல்சியஸாக அதிகரித்திருப்பதாக வானிலை ஆய்வு மையம் கூறியிருக்கிறது.
About Writer
மகேந்திரன்
14 ஆண்டுகள் பல்வேறு இணையதள செய்தி பிரிவில் பணியாற்றிய அனுபவம் உள்ளவர். அரசியல், விளையாட்டு, பொழுதுபோக்கு, ஆன்மிகம், தொழில்நுட்ப செய்திகள் எழுதுவதில் அனுபவம் உள்ளவர்..... Read More
அடுத்த கட்டுரையில்
தங்கம் வாங்காதீங்க.. ஃபாரின் போகாதீங்க ப்ளீஸ்!.. பிரதமர் மோடி மீண்டும் கோரிக்கை!...