1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Ashok
Last Modified: புதன், 20 ஜனவரி 2016 (18:07 IST)

தலித் மாணவர் தற்கொலையில் அமைச்சருக்கு தொடர்பு இல்லை: இராணி விளக்கம்

ஹைதரபாத் பல்கலைக்கழகத்தில் தலித் மாணவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பல்கழலைக்கழகத்தில் மாணவர்களிடையே தலித் மற்றும் தலித் அல்லாதவர் இடையே ஏற்பட்ட பிரச்னை அல்ல என்ற மத்திய மனித வள மேம்பாட்டுத் துறை அமைச்சர் ஸ்மிருதி  இராணி விளக்கம் அளித்துள்ளார்.


 
 
இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஹைதரபாத் பல்கலைக்கழகத்தில் மாணவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் என்பது அங்கு மாணவர்களிடையே தலித் மற்றும் தலித் அல்லாதவர் இடையே ஏற்பட்ட பிரச்னை அல்ல.
 
மத்திய மனித வள மேம்பாட்டுத் துறை சார்பில் அமைக்கப்பட்டுள்ள உண்மை அறியும் குழு ஹைதரபாத் பல்கழைக்கழகத்தில் இருந்து இன்று மாலை டில்லி திரும்புவார்கள் என எதிர்ப்பார்க்கிறோம். அவர்கள் விரைவில் அறிக்கை தாக்கல் செய்வார்கள். இந்த அறிக்கையின் படி மத்திய அரசு தேவையான நடவடிக்கை எடுக்கும். மாணவர் ரோஹித்தின் தற்கொலை கடிதத்தில் யாருடைய பெயரையும் குறிப்பிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
 
ஹைதரபாத் பல்கலைக்கழகத்தில் மாணவர் தற்கொலை செய்து கொண்டதற்கு  மத்திய அமைச்சர் பண்டாரு தத்ரேயாவிற்கு தொடர்பு இல்லை என்றும் காங்கிரஸ் ஆட்சியில் இருந்தே ஹைதரபாத் பல்கலைக்கழகத்தில் பிரச்னை இருந்து வந்துள்ளது. அதை அவர்கள் அப்பொழுதுதே தீர்த்திருந்தால், ரோஹித்தின் உயிரை காப்பாற்றியிருக்கலாம் என்றும் அவர் கூறினார்.