இதுற்கெல்லாமா தற்கொலை பண்ணிப்பாங்க?

இதுற்கெல்லாமா தற்கொலை பண்ணிப்பாங்க?


Dinesh| Last Updated: வியாழன், 11 ஆகஸ்ட் 2016 (01:42 IST)
திருவனந்தபுரம் அருகே ஆற்றிங்கல் பகுதியை சேர்ந்தவர் சுதாகரன் சைலஜா தம்பதியின் மகன் உல்லாஸ் (14) அரசு பள்ளியில் உல்லாஸ் 9-ம் வகுப்பு படித்து வந்தான்.

 


மாணவர் உல்லாசுக்கு தலை முடியை நீளமாக வளர்ப்பதில் அதிக ஆசை என்பதால் அவன் தனது தலை முடியை நீளமாக வளர்த்து வந்தான். இதை அவரது பள்ளி ஆசிரியர்கள் கண்டித்த பிறகும், நீளமான தலை முடியுடனேயே பள்ளிக்கு சென்று வந்த உல்லாஸை பள்ளியின் தலைமை ஆசிரியர், ”மறுநாள் பள்ளிக்கு வரும் போது கண்டிப்பாக தலை முடியை வெட்டியிருக்க வேண்டும் இல்லாவிட்டால் பெற்றோரை அழைத்து வந்தால்தான் பள்ளியில் அனுமதிக்க முடியும்” என்று கண்டித்துள்ளார். இதனால் மனவேதனை அடைந்த உல்லாஸ் பள்ளி முடிவதற்கு முன்பே யாரிடமும் சொல்லிக்கொள்ளாமல் பாம்பன் பாறை ஆற்றுப்பாலத்தில் இருந்து ஆற்றுக்குள் குதித்து விட்டான்.

ஆற்றில் குளித்துக் கொண்டிருந்த சிலர் இதை பார்த்து அதிர்ச்சி அடைந்து, உல்லாசை காப்பாற்ற முயன்றனர். அதற்குள் அவன் தண்ணீரில் மூழ்கிவிட்டான். தகவல் அறிந்து, தீயணைப்பு படையினர் அங்கு சென்று 1 மணி நேரம் போராடி உல்லாஸ் உடலை இறந்த நிலையில் மீட்டனர்.  உல்லாசின் பெற்றோர் மகனின் உடலை பார்த்து கதறி அழுதனர். இதுபற்றி ஆற்றிங்கல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள். இதை அடுத்து, தான் ஆசையாக வளர்த்த தலைமுடியை வெட்டும்படி கண்டித்ததால் மனமுடைந்து தற்கொலை செய்யப்போவதாக உல்லாஸ் எழுதியிருந்த கடிதம், அவன் புத்தக பையில் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.   


இதில் மேலும் படிக்கவும் :