1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Siva

5 மணிநேரம் குளத்து தண்ணீருக்குள் ஒளிந்திருந்த திருடன்.. மூச்சுவிட என்ன செய்தான்? சினிமாவை மிஞ்சிய சம்பவம்

5 மணிநேரம்  குளத்து தண்ணீருக்குள் ஒளிந்திருந்த திருடன்.. மூச்சுவிட என்ன செய்தான்? சினிமாவை மிஞ்சிய சம்பவம்
மத்திய பிரதேச மாநிலம் ஜபல்பூரில் ஒரு வினோதமான மற்றும் சினிமா பாணி திருட்டு சம்பவம் நிகழ்ந்துள்ளது. ரயிலில் ஒரு பெண்ணின் பையை திருடிவிட்டு தப்பியோடிய திருடன், காவல்துறையிடம் பிடிபடாமல் இருக்க குளத்திற்குள் குதித்து ஐந்து மணி நேரம் ஒளிந்திருந்துள்ளார்.
 
32 வயதான ஹர்விந்தர் சிங் என்ற அந்த நபர், ரேவாவிலிருந்து இட்வாரி சென்ற ரயிலில் ஒரு பெண்ணின் பையை பறித்துக்கொண்டு தப்பினார். ரயில்வே பாதுகாப்புப் படையினர் அவரை துரத்தியபோது, அங்கிருந்த பாசி படர்ந்த குளத்திற்குள் அவர் குதித்தார். காவல்துறையினர் தேடுவதை உணர்ந்த அவர், குளத்திற்குள் இருந்த ஒரு தாமரைத் தண்டை பயன்படுத்தி சுவாசித்துள்ளார். அந்த தண்டை ஒரு குழாய் போல பயன்படுத்தி, நீருக்கு அடியில் இருந்தவாறே சுமார் ஐந்து மணி நேரம் அவர் தப்பித்துள்ளார்.
 
நீச்சல் வீரர்களின் உதவியுடன் நீண்ட நேர தேடலுக்கு பிறகே, பாசிகளுக்கு அடியில் பதுங்கியிருந்த அவரை பிடிப்பதில் போலீஸார் வெற்றி பெற்றனர். விசாரணையில், இவர் ஒரு பழைய குற்றவாளி என்பதும், ஏற்கனவே ஆந்திராவில் வைர நகைகளை திருடிய வழக்கில் கைதானவர் என்பதும் தெரியவந்தது. 
 
தாமரை தண்டு மூலம் சுவாசித்து காவல்துறையை ஏமாற்ற முயன்ற இந்த திருடனின் புத்திசாலித்தனம் தற்போது பரவலாக பேசப்பட்டு வருகிறது.
 
Edited by Siva