வெள்ளி, 29 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Bharathi
Last Modified: திங்கள், 5 அக்டோபர் 2015 (09:41 IST)

மாட்டிறைச்சியை உண்பவர்கள் நரகத்திற்கு செல்வார்கள்: சொல்கிறார் பா.ஜ.க. எம்.பி

மாட்டு இறைச்சியை உண்பவர்கள் நரகத்திற்கு செல்வார்கள் என்று பா.ஜ.க. எம்.பி. ஹக்முதேவ் நாராயண் யாதவ்  தெரிவித்துள்ளார்.


 
 
உத்திரப்பிரதேசத்தில் மாட்டிறைச்சி சாப்பிட்டதாகக் கூறி இஸ்லாமியர் ஒருவர் அடித்துக் கொல்லப்பட்ட சம்பவம் ஒட்டுமொத்த நாட்டையும் அதிர்ச்சிக்குள்ளாக்கி இருக்கிறது. 
 
கொல்லப்பட்ட அக்லாப்பின் உறவினர்களை அம்மாநில முதல் அமைச்சர் அகிலேஷ் யாதவ், டெல்லி முதல் அமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால், காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல்காந்தி ஆகியோர் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினர்.
 
தாத்ரி சம்பவம் குறித்து கருத்து தெரிவித்த ராஷ்டிரிய ஜனதா தள் கட்சித் தலைவர் லல்லு பிரசாத் யாதவ், வெளிநாட்டில் வாழும் இந்துக்கள் கூட மாட்டிறைச்சியை உண்பதாக தெரிவித்திருந்தார்.லல்லுவின் இந்தக் கருத்துக்கு பா.ஜ.க.வை சேர்ந்த எம்.பி. ஹக்முதேவ் நாராயன் யாதவ் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். 
 
இது குறித்து அவர் கூறுகையில், "இந்தக் கருத்தை கூறியதன் மூலம் சமூக அளவில் லல்லு பிரசாத் யாதவ் குற்றம் புரிந்துள்ளார். மேலும் யாதவ சமூகத்தையும் லல்லு கொச்சைப்படுத்தியுள்ளார். ஹிந்துக்களும் யாதவ சமூகத்தினரும் பசுக்களை தெய்வமாக வழிபடக்கூடியவர்கள். மாட்டிறைச்சியை உண்பவர்கள் நரகத்திற்கு செல்வார்கள்." இவ்வாறு அவர் தெரிவித்தார்.