ஞாயிறு, 29 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sinoj
Last Modified: சனி, 25 நவம்பர் 2023 (18:52 IST)

துபாய் அழைத்துச் செல்லாததால் கணவனை கொன்ற மனைவி!

Death
துபாய் அழைத்துச் செல்லாத கணவரை மனைவி கொன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இன்றைய காலத்தில் கணவர் மனைவி இடையே விவாகரத்து செய்வது, கள்ளக் காதல்களும் அதிகரித்து வருவது செய்திகளில் அறிய முடிகிறது.

அதேபோல் சில இடங்களில் அற்ப காரணங்களுக்காக கொலை செய்வது உள்ளிட்ட குற்ற சம்பவங்களும் நடந்து வருகின்றன.

இந்த நிலையில், துபாய் அழைத்துச் செல்லாததால் கணவரை கொன்ற மனைவியை போலீஸார் கைது செய்துள்ளனர்.

புனேவில் பிறந்தநாள் கொண்டாட துபாய் அழைத்துச் செல்லும்படி தன்  கணவரை மனைவி வற்புறுத்தியுள்ளார். ஆனால், கணவர் அவரை துபாய் அழைத்துச் செல்லவில்லை என தெரிகிறது.

இதனால் ஆத்திரமடைந்த மனைவி, கணவரின் முகத்தில் குத்தியதில்  கணாவர் நிகில் உயிரிழந்தார். மனைவி குத்தியதில் அவரின் பற்கள் உடைந்து ரத்தம் கசிந்து,பின் சுய நினைவை இழந்து கிழே விழுந்து உயிரிழந்துள்ளதாக போலீஸார் விசாரணையில் தகவல் வெளியாகிறது.