வெள்ளி, 29 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Bharathi
Last Modified: புதன், 21 அக்டோபர் 2015 (11:11 IST)

காக்கா முட்டை திரைப்பட பாணியில் சைக்கிள் திருடிய சிறுவர்கள்

பெங்களூருவில் காக்கா முட்டை திரைப்பட பாணியைப் போன்று சிறுவர்கள் இருவர்கள் சைக்கிள் திருடிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


 
 
காக்கா முட்டை திரைப்படம் இந்திய சினிமாவுக்கான மகுடன். வடசென்னை சிறுவர்களின் வாழ்வியலை அப்பட்டமாக வெளிக்காட்டிய இத்திரைப்படம் தேசிய விருதையும் தட்டிச் சென்றது.
 
திரைப்படத்தின் ஒரு காட்சியில் சகோதரர்கள் இருவர் பீட்ஸா சாப்பிடுவதற்காக நிலக்கரியை திருடி பணம் சேர்ப்பார்கள்.  திரைக் கதையாக இருந்து படமாக்கப்பட்ட இந்த திரைப்படத்தின் நிகழ்வுகள் தற்போது நிஜமாகி உள்ளன.
 
ஆம், பெங்களூருவில் சிக்கன் கபாப்’ ருசிப்பதற்காக பெங்களூருவில் 2 சிறுவர்கள் சைக்கிள் திருட்டில் ஈடுபட்டு வந்தது தெரியவந்துள்ளது.
 
பெங்களூரு மல்லேசுவரம் போலீஸ் எல்லைக்குட்பட்ட பகுதியில் கடந்த சில மாதங்களாக சைக்கிள் திருட்டு அதிக அளவில் நடைபெற்று வந்தது. இது குறித்த புகார்களும் நாள்தோறும் அதிகரிக்கவே போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.
 
இந்நிலையில், 6–ம் வகுப்பு மற்றும் 9–ம் வகுப்பு படித்து வரும் 2 சிறுவர்களை பிடித்து விசாரிக்கையில், அவர்கள் சிக்கன் கபாப் சாப்பிடவே சைக்கிளை திருடியது தெரியவந்தது.
 
இதனைத் தொடர்ந்து அவர்கள் இருவரையும் எச்சரித்த போலீசார் பின்னர் விடுவித்தனர்.