1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Bharathi
Last Modified: சனி, 19 செப்டம்பர் 2015 (07:15 IST)

ஷீனா போரா கொலை வழக்கு சி.பி.ஐ.க்கு மாற்றம்

ஷீனா போரா கொலை வழக்கை சி.பி.ஐ.க்கு மாற்றி மஹாராஷ்டிரா அரசு உத்தவிட்டுள்ளது.


 
 
ஒட்டுமொத்த நாட்டையே பெரும் பரபரப்பை ஏற்படுத்திய ஷீனா போரா கொலை வழக்கில் நாளுக்கு நாள் புதிய திருப்பங்கள்  அரங்கேறி வருகின்றன.
 
தனியார் தொலைக்காட்சி ஒன்றின் தலைவராகப் பொறுப்பு வகித்தவர் பீட்டர் முகர்ஜி. அவரது மனைவி இந்திராணி முகர்ஜி. இவர்கள் இருவரும் இணைந்து தனியார் செய்தித் தொலைக்காட்சி ஒன்றை ஆரம்பித்தனர். பின்னர் அந்த நிர்வாகத்தில் இருந்து இருவரும் விலகினர்.
 
இந்திராணிக்கும் அவரது முதல் கணவர் சித்தார்த் தாஸூக்கும் ஷீனா போரா என்ற மகளும், மைக்கேல் போரா என்ற மகனும் பிறந்தனர். அதேபோல பீட்டர் முகர்ஜிக்கும், அவரது முதல் மனைவிக்கும் பிறந்தவர் ராகுல் முகர்ஜி.
 
இந்நிலையில், ஷீனா போரா கடந்த 2012-ஆம் ஆண்டு கொலை செய்யப்பட்டார். அவரது உடல் பாகங்கள் மகாராஷ்டிர மாநிலம் ராய்கட் வனப்பகுதிக்குள் கண்டெடுக்கப்பட்டன. மர்ம நபர்கள் சிலர் ஷீனா போராவைக் கொலை செய்ததாத முதலில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
 
இந்நிலையில், இந்திராணி முகர்ஜியின் கார் ஓட்டுநரை சந்தேகத்தின் பேரில் சில நாள்களுக்கு முன்பு போலீஸார் கைது செய்து விசாரித்தனர்.  அப்போது குடும்பத் தகராறு காரணமாக ஷீனா போராவை, இந்திராணி முகர்ஜியின் தூண்டுதலின் பேரில் தானும், சஞ்சீவ் கன்னாவும் இணைந்து கொலை செய்ததாக கார் ஓட்டுநர் குற்றத்தை ஒப்புக்கொண்டார்.
 
மேலும் ஷீனாவின் டி.என்.ஏ., மாதிரியை, இந்திராணியின் ரத்த மாதிரியுடன் ஒப்பிட்டதில், இந்திராணிதான் ஷீனாவின் தாய் என்பதும் தெரியவந்தது.
 
ஷீனா போரா கொலை வழக்கில் தலைமை விசாரணை அதிகாரியாக இருந்த ராகேஷ் மிஷ்ரா நீக்கம் உள்ளிட்ட பல அதிரடி திருப்பங்கள் இந்த வழக்கில் நாளொரு மே
னியும் பொழுதொரு வண்ணமாக  அரங்கேறி வருகின்றன.
 
அந்தவகையில் மும்பை காவல்துறை வசம் இருக்கும் இந்த விசாரணை தற்போது மத்திய குற்றப்பிரிவு புலனாய்வு அமைப்புக்கு மாற்றப்பட்டுள்ளது.