தொடர்புடைய செய்திகள்
- ஈரான் தாக்கியதில் அமெரிக்காவுக்கு ரூ.6,700 கோடி நஷ்டம்.. இன்னும் அதிகமாகுமா?
- அடுத்த இலக்கு கடல்நீரை குடிநீராக்கும் ஆலைகள்.. ஒருத்தருக்கும் குடிக்க தண்ணீர் கிடைக்காது: ஈரான் எச்சரிக்கை
- போலி ஆதார் அட்டையை பயன்படுத்தி சிறுமிகள் கடத்தல்.. துரிதமாக செயல்பட்ட காவல்துறை..!
- இஸ்ரேல் அணுசக்தி மையம் அருகே ஈரான் ஏவிய ஏவுகணை.. 40 பேர் படுகாயம்.. பெரும் பதட்டம்..!
- தாய்லாந்து தீவில் விஜய் தேவரகொண்டா - ராஷ்மிகா.. தேனிலவு புகைப்படங்கள் வைரல்..!
ரூ.15,000 சம்பாதித்தபோது இருந்த மகிழ்ச்சி, ரூ.2.5 லட்சம் சம்பாதிக்கும்போது இல்லை.. ஒரு பெண்ணின் வைரல் பதிவு..!
அதிக சம்பளம் மகிழ்ச்சியை தரும் என்ற பொதுவான கருத்தை உடைக்கும் விதமாக, 'சாக்ஷி' என்ற பெண் எக்ஸ் தளத்தில் பகிர்ந்துள்ள பதிவு வைரலாகி வருகிறது. மாதம் ரூ.15,000 சம்பாதித்தபோது இருந்த மகிழ்ச்சி, தற்போது ரூ.2.5 லட்சம் சம்பாதிக்கும்போது இல்லை என்று அவர் நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டுள்ளார்.
வருமானம் உயர உயர, மற்றவர்களுடன் நம் வாழ்க்கையை ஒப்பிட்டுப் பார்ப்பதே இந்த அதிருப்திக்கு காரணம் என்று அவர் விளக்குகிறார்.
ரூ.1.5 லட்சம் வருமானம் ஈட்டியபோது தனக்கு இன்னும் அதிகமாக கிடைக்க வேண்டும் என்ற எண்ணம் தோன்றியதாகவும், ரூ.2.5 லட்சம் வாங்கியபோது மற்றவர்களின் வளர்ச்சியை பார்த்து அதுவும் குறைவாக தெரிந்ததாகவும் அவர் கூறியுள்ளார்.
வேலையை விட்டுவிட்டு வருமானமே இல்லாத நிலையை சந்தித்தபோதுதான், மகிழ்ச்சி என்பது சம்பளத்தில் இல்லை, நாம் நேசிக்கும் வேலையை செய்வதில்தான் இருக்கிறது என்பதை அவர் உணர்ந்துள்ளார்.
"வாழ்க்கையை எப்படி வாழ விரும்புகிறோம் என்ற நம் பார்வையில் தான் எல்லாம் இருக்கிறது" என்ற அவரது கருத்து பலரையும் சிந்திக்க வைத்துள்ளது. சமூக வலைதளங்களில் பலரும் தங்கள் அனுபவங்களை பகிர்ந்து, நிம்மதி என்பது பணத்தை விட மனநிறைவிலேயே உள்ளது என்பதை உறுதிப்படுத்தி வருகின்றனர்.
Edited by Siva
At a salary of:
— Sakshi (@Sakshi50038) March 20, 2026
15K per month, I was the happiest.
150K per month, I felt it was less - I deserved more.
250K per month, I felt I was doing well, but after seeing others, it again felt less.
I realised it was never about the salary.
It was the comparison that created…
