மாவு உருண்டைக்குள் வெடி வைத்து பசுவுக்கு கொடுத்த கொடூரம் !

cow
sinoj| Last Modified சனி, 6 ஜூன் 2020 (23:25 IST)

கேரள மாநிலத்தில் யானைக்கு அன்னாசிப்பழத்தில் வெடி வைத்துக் கொடுத்த சம்பவம் இந்தியாவை உலுக்கியுள்ள நிலையில், இமாச்சல் பிரதேசத்திலும் ஒரு சம்பவம் நடைபெற்றுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இமாச்சல் பிரதேசம் மாநிலத்தில் உள்ள பிலாஸ்பூர் மாவட்டத்தின் ஜந்துட்டா என்ற பகுதியில் சினைப்பசு ஒன்றுக்கு கோதுமை மாவு உருண்டைக்குள் வெடி வைத்துக் கொடுக்கபட்டுள்ளது.

இதனைக் கடித்த பசுவின் வாய் சிதைந்து படுகாயமடைந்தது. தற்போது இதுகுறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.இதில் மேலும் படிக்கவும் :