செவ்வாய், 23 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Dinesh
Last Modified: ஞாயிறு, 21 ஆகஸ்ட் 2016 (15:09 IST)

’சோகம்’ - மோடிக்கு கடிதம் எழுதி வைத்து விட்டு தற்கொலை செய்து கொண்ட இளம் பெண்

’சோகம்’ - மோடிக்கு கடிதம் எழுதி வைத்து விட்டு தற்கொலை செய்து கொண்ட இளம் பெண்

பஞ்சாப் மாநிலத்தில், காய்கறி விற்பனை செய்பவரின் மகளான பூஜா (20) ஒரு தேசிய அளவிலான கைப்பந்து வீராங்கனை  ஆவார்.


 


இந்நிலையில், பாட்டியாலாவில் உள்ள கால்சா கல்லூரி பூஜாவிற்கு இலவசமாக தங்கும் விடுதி மற்றும் உணவு வசதி வழங்குவதாக உறுதியளித்து கடந்த ஆண்டு அவரை கல்லூரியில் சேர்த்துக் கொண்டது. அதன்படி, அவர் அக்கல்லூரியில், இளங்கலை பட்டப்படிப்பு படித்து வந்தார்.

ஆனால் இவ்வருடம் அவருக்கு விடுதில் தங்குவதற்கு அனுமதி மறுக்கப்பட்டது. இதை அடுத்து, பூஜா வீட்டில் இருந்து கல்லூரிக்கு செல்லும் நிலை ஏற்பட்டது. அவரால் அந்த செலவை சமாளிக்க முடியவில்லை. அதனால், பூஜா தற்கொலை செய்து கொண்டார்.

பிரதமர் மோடிக்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில் அவர் கூறியதாவது, “சமூதாயத்தில் என்னை போன்று உள்ள பிற பெண்களுக்கு தேவையான கல்வி வசதிகளை பிரதமர் மோடி உறுதிசெய்ய வேண்டும், என்னுடைய பயிற்சியாளரே என் தற்கொலைக்கு காரணம் அவரால்தான் எனக்கு விடுதியில் தங்கும் வசதி மறுக்கப்பட்டது.” என்று குறிப்பிட்டிருந்தார்.

இது குறித்து கல்லூரி நிர்வாகம் கூறியதாவது, “பூஜாவிற்கு இலவசமாக கல்வி பயில அனுமதி வழங்கப்பட்டது உண்மைதான், ஆனால் இந்தவருடம் கல்வியில் அவருடைய செயல்பாடு திருப்தி அளிக்கவில்லை எனவே அவருக்கு, வழங்கப்பட்ட சலுகைகள் நீக்கப்பட்டது” என்றனர்.