1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Abimukatheesh
Last Updated : சனி, 23 ஏப்ரல் 2016 (17:33 IST)

கோடையின் தாக்கத்தால் தமிழகத்தில் குடிநீர் பஞ்சம் ஏற்பட வாய்ப்பு

இந்தியாவின் 91 முக்கிய நீர்தேக்கங்களின் நீர்மட்டம் வேகமாக குறைந்து வருவதால், தமிழகம் உள்பட 15 மாநிலங்களில் குடிநீர் பஞ்சம் ஏற்பட வாய்ப்புள்ளதாக மத்திய நீர் வளத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.


 

 
91 நீர்தேக்கங்களில் நீர் இருப்பு அளவு 34.082 பில்லியன் க்யூபிக் மீட்டர் உள்ளதாகவும், இது நீர்தேக்கங்களின் மொத்த சேமிப்பு அளவில் 22 சதவிதம்தான் என்றும் மத்திய நீர் வளத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
 
இந்நிலையில், இமாசலப் பிரதேசம், பஞ்சாப், ராஜஸ்தான், ஜார்கண்ட், ஒடிசா, மேற்கு வங்கம், திரிபுரா, குஜராத், மகாராஷ்டிரா, உத்தரப் பிரதேசம், உத்தரகண்ட், மத்தியப் பிரதேசம், சத்தீஸ்கர், ஆந்திரா, தெலங்கானா, கர்நாடகா, கேரளா, மற்றும் தமிழ்நாடு ஆகிய மாநிலங்களில் நீர்தேக்கங்களில் மிக குறைந்த அளவே நீர் இருப்பு உள்ளது.
 
ஏற்கனவே, பல மாநிலங்களில் கடும் வறட்சி நிலவும் நிலையில், இந்த கோடையில் தண்ணீர் தட்டுப்பாடு அதிகரிக்க வாய்ப்புள்ளதாகவும், இதனால் பொது மக்கள் தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்த வேண்டும் என்றும் மத்திய அரசு வேண்டுகோள் விடுத்துள்ளது.