ஏன் இந்த தடை தாமதிக்கப்பட்டது? அரசை தட்டி கேட்கும் சு.சுவாமி!!

Sugapriya Prakash| Last Modified புதன், 1 ஏப்ரல் 2020 (12:39 IST)
பிப்ரவரி 1 வாக்கில் வெளிநாட்டவர்கள் இந்தியா வருவதற்குத் தடை விதித்திருந்தால் இந்த நிலை ஏற்பட்டிருக்குமா சு.சுவாமி கேள்வி.
 
இந்தியாவில் கொரோனா பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை ஆயிரத்தை தாண்டியுள்ள நிலையில் 38 பேர் இதுவரை உயிரிழந்துள்ளனர். கடந்த மார்ச் மாதம் 13 முதல் 15 வரை டெல்லியில் நடந்த இஸ்லாமிய மத குருக்கள் சந்திப்பில் இந்தியா மட்டுமல்லாது தாய்லாந்து, மலேசியா உள்ளிட்ட நாடுகளில் இருந்து பலர் கலந்துகொண்டுள்ளனர். 
 
சுமார் 2 ஆயிரம் பேர் வரை அந்த கூட்டத்தில் கலந்து கொண்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில் அந்த கூட்டத்தில் கலந்து கொண்டு ஊர் திரும்பிய காஷ்மீர் இஸ்லாமிய குரு ஒருவர் கொரோனா தாக்கி உயிரிழந்துள்ளார். 
 
கூட்டம் முடிந்த பிறகும் மசூதிகளில் தங்கியிருந்தவர்களை மருத்துவ பரிசோதனை மேற்கொண்டதில் பலருக்கு கொரோனா இருப்பது தெரிய வந்துள்ளது. இதனால் அந்த கூட்டத்தில் கலந்து கொண்ட பலரையும் தேடும் பணி முடுக்கிவிடப்பட்டுள்ளது.
 
இது தொடர்பான பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி, தன்னுடைய டிவிட்டர் பதிவில், பிப்ரவரி 1 வாக்கில் வெளிநாட்டவர்கள் இந்தியா வருவதற்குத் தடை விதித்திருந்தால், இந்தியா திரும்பும் இந்தியர்கள் 14 நாட்களுக்கு விமான நிலையத்திற்கு அருகிலுள்ள விடுதிகளில் தனிமைப்படுத்தப்பட்டிருந்தால் இந்த தப்லீக் மாநாடு குழப்பம் ஏற்பட்டிருக்காது. ஏன் இந்தத் தடை தாமதிக்கப்பட்டது? என்று கேள்வி எழுப்பியுள்ளார். 


இதில் மேலும் படிக்கவும் :