1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Murugan
Last Modified: புதன், 13 ஜனவரி 2016 (14:14 IST)

பெங்களூரில் குண்டு வெடித்த சம்பவம் : வெடிகுண்டு வைத்தவரின் வீடியோ வெளியீடு

2014 ஆம் ஆண்டு பெங்களூர் எம்.ஜி.ரோட்டில் குண்டு வெடித்தது  சம்பந்தமாக, சந்தேகிக்கப்படும் ஒருவருடைய வீடியோயை காவல்துறை வெளியிட்டுள்ளது.


 

 
பெங்களூர் எம்.ஜி.ரோட்டிற்கு அருகில் உள்ள சர்ச் தெரு பகுதியில் 2014 ஆம் ஆண்டு டிசம்பர் 28ஆம் தேதி ஒரு குண்டு வெடித்தது. அதில் அந்த இடத்தில் நின்றிருந்த பவானி என்பவர் பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் சிலர் காயமடைந்தனர். பவானி சென்னை அண்ணாநகர் பகுதியை சேர்ந்தவர்.
 
இந்த சம்பவம் தொடர்பாக பெங்களூர் போலிசார் விசாரணை செய்து வந்தனர். ஆனால் யார் குண்டு வைத்தது என்று கண்டுபிடிக்க முடியவில்லை. அதன்பின் அந்த வழக்கு என்.ஐ.ஏ விசாரணைக்கு மாற்றப்பட்டது. வெடிகுண்டு வெடித்த பகுதியில் நடந்த சம்பவங்களை, சிசிடிவி கேமரா மூலம் அவர்கள் ஆராய்ந்ததில், ஒருவர் மீது சந்தேகம் ஏற்பட்டது.
 
அவர் எம்.ஜி.ரோடு பகுதியில் தலையில் தொப்பி, கையில் பை, நீல நிற சட்டை அணிந்துள்ளார்.  அவர்தான் குண்டு வைத்தவர் என்று போலிசார் சந்தேகிக்கிறார்கள். அவர் நடந்து செல்லும் வீடியோ கேமராவில் பதிவாகியுள்ளது. ஆனால் அவரின் முகம் சரியாக தெரியவில்லை. அந்த வீடியோவை வெளியிட்ட போலிசார், அவரை பற்றிய தகவல் தெரிந்தால், காவல்துறைக்கு தகவல் கொடுங்கள் என்று கூறியுள்ளனர்.

அந்த மர்ம நபரின் வீடியோ உங்கள் பார்வைக்கு...