சுஷ்மா, வசுந்தரா ராஜே பதவி விலகும் பேச்சுக்கே இடமில்லை: பாஜக திட்டவட்ட அறிவிப்பு


K.N.Vadivel| Last Updated: வியாழன், 23 ஜூலை 2015 (04:51 IST)
லலித் மோடி விவகாரத்தில் சுஷ்மா ஸ்வராஜ் மற்றும் வசுந்தரா ராஜே பதவி விலகும் பேச்சுக்கே இடமில்லை என்று மத்திய அமைச்சர் முக்தார் அப்பாஸ் நக்வி கருத்து தெரிவித்துள்ளார்.
 
 
டெல்லியில், நாடாளுமன்றக் குழு கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்துக்குப் பின்பு மத்திய அமைச்சர் முக்தார் அப்பாஸ் நக்வி செய்தியாளர்களிடம் கூறியதாவது:-
 
பாஜக எம்பிக்கள் மத்திய அரசின் செயல்பாடுகள் குறித்து பெருமைபடும்படியாக செயல்பட வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடி உத்தரவிட்டுள்ளார். அதனை பாஜக எம்பிக்கள் பின்பற்றுவார்கள்.
 
மேலும், ஐபிஎல் முன்னாள் தலைவர் லலித் மோடி விவகாரத்தில், அவருக்கு எந்தவித உதவியும் செய்யவில்லை என சுஷ்மா ஸ்வராஜ் ஏற்கனவே பல முறை உறுதிபட தெரிவித்துவிட்டார்.
 
எனவே, லலித் மோடி விவகாரத்தில், மத்திய அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் மற்றும் ராஜஸ்தான் முதலமைச்சர் வசுந்தரா ராஜே ஆகியோர் பதவி விலகும் பேச்சுக்கே இடமில்லை என்றார். 
 


இதில் மேலும் படிக்கவும் :