1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Caston
Last Modified: புதன், 9 மார்ச் 2016 (11:23 IST)

தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்கு மரியாதை செலுத்திய காங்கிரஸ்

நேற்று சர்வதேச மகளிர் தினம் கொண்டாடப்பட்டது. அரசியல் தலைவர்கள் என பலதரப்பட்ட மக்கள் தங்கள் வாழ்த்துக்களை மகளிருக்கு தெரிவித்தனர்.


 
 
அகில இந்திய காங்கிரஸின் அதிகாரப்பூர்வ டுவிட்டர் பக்கத்தில் பெண்மையை கொண்டாடுவோம் என ஒரு நிமிட ஜிஃப் வீடியோ ஒன்றை வெளியிட்டனர். அதில் இந்தியாவில் உள்ள சிறந்த பெண் ஆளுமைகளை கௌரவித்திருந்தனர்.
 
இதில் தமிழக முதல்வர் ஜெயலலிதா, மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் ஆகியோரும் இடம் பெற்றிருந்தது பலரையும் ஆச்சரியப்படுத்தியது.

 
சுஷ்மா, மம்தா, ஜெயலலிதா ஆகிய மூன்று பேருக்கும் பொதுவான அரசியல் எதிரி என்றால் அது காங்கிரஸ் தான். ஆனால் காங்கிரஸ் கட்சி அரசியல் வேறுபாடுகளை மறந்து பெண்மையை கொண்டாடுவோம் என இவர்களை கவுரவித்தது.
 
மேலும் இதில் இந்திரா காந்தி, சோனியா காந்தி, முன்னாள் சபாநாயகர் மீரா குமார், தற்போதைய சபாநாயகர் சுமித்ரா மகாஜன், மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் உள்ளிட்ட பல பெண்கள் இடம் பெற்றுள்ளனர்.