தலைமை தேர்தல் ஆணையர் ஓய்வு: புதிய ஆணையர் யார்?

தலைமை தேர்தல் ஆணையர் ஓய்வு: புதிய ஆணையர் யார்?
siva| Last Updated: திங்கள், 12 ஏப்ரல் 2021 (20:55 IST)
தலைமை தேர்தல் ஆணையர் ஓய்வு: புதிய ஆணையர் யார்?
இந்தியாவின் தலைமை தேர்தல் அதிகாரியாக கடந்த சில வருடங்களாக பணி செய்து கொண்டிருந்த சுனில் அரோரா அவர்கள் இன்றுடன் ஓய்வு பெறுகிறார். இதனை அடுத்து சற்றுமுன் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் அவர்கள் புதிய தலைமை தேர்தல் ஆணையரை நியமனம் செய்துள்ளார்

சுசில் சந்திரா என்பவர் தான் புதிய தலைமை தேர்தல் ஆணையர் என ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் அவர்கள் உத்தரவிட்டுள்ளார். இவர் 2022 ஆம் ஆண்டு மே மாதம் வரை தலைமை தேர்தல் ஆணையராக பதவியில் இருப்பார் என்பதும் இந்த காலகட்டத்தில் உத்தரபிரதேசம் உள்ளிட்ட ஒரு சில மாநிலங்களில் தேர்தல் நடைபெற உள்ளது என்பதும் அந்த தேர்தல் இவரது தலைமையில்தான் நடைபெறும் என்பதும் குறிப்பிடத்தக்கது

சுசில் சந்திரா அவர்கள் நாளை தலைமை தேர்தல் அதிகாரியாக பதவியேற்க இருப்பதை அடுத்து அவருக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது
இதில் மேலும் படிக்கவும் :