ஊழியர்களுக்கு கார் மற்றும் வீடுகளை தீபாவளி போனஸாக அளித்த வைர வியாபாரி

ஊழியர்களுக்கு கார் மற்றும் வீடுகளை தீபாவளி போனஸாக அளித்த வைர வியாபாரி


Murugan| Last Modified வெள்ளி, 28 அக்டோபர் 2016 (13:43 IST)
குஜராத்தை சேர்ந்த ஒரு வைர வியாபாரி, தன்னுடைய ஊழியர்களுக்கு கார் மற்றும் வீடுகளை தீபாவளி பரிசாக அளித்துள்ளார்.

 

 
குஜராத் மாநிலத்தில் சூரத்தை சேர்ந்த வைர வியாபாரி  சவ்ஜிபாய் தோலாக்கியா. ஹரிகிருஷ்ணா எக்ஸ்போர்ட்ஸ் என்ற நிறுவனத்தை நடத்தி வருகிறார். இந்த நிறுவனம் மொத்தம் 71 நாடுகளில் செயல்பட்டு வருகிறது. இவர் ஓவ்வொரு வருடமும் தன்னுடைய ஊழியர்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்துவதை வழக்கமாக கொண்டுள்ளார்.
 
அதன்படி இந்த முறை, தனது ஊழியர்களுகு தீபாவளி போனஸாக 1260 கார்கள் மற்றும் 400 பிளாட்டுகள் வழங்கி அசத்தியுள்ளார்.


 

 
இவரிடம் மொத்தம் 5500 ஊழியர்கள் பணிபுரிந்து வருகின்றனர். திறமையின் அடிப்படையில் ஊழியர்கள் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர். ஏற்கனவே வீடு வைத்திருப்பவர்களுக்கு மற்றும் இரு சக்கர வாகனங்கள் வைத்திருப்பவர்களுக்கு கார்களும், ஏற்கனவே கார்கள் வைத்திருப்பவர்களுக்கு பிளாட்டுகளும் வழங்கப்படுகிறது. இதற்காக ரூ.50 கோடி செலவிடப்பட்டுள்ளது.
 
இதுபற்றி கருத்து தெரிவித்துள்ள சவ்ஜிபாய் ‘என்னுடைய நிறுவனத்தில் பணிபுரியும் ஒவ்வொரு ஊழியர்களுக்கும் சொந்த வீடும் காரும் இருக்க வேண்டும் என்பதே என் நோக்கம். அடுத்த 5 ஆண்டுகளில் அவர்கள் அனைவரும் சொந்த வீட்டிற்கும் காருக்கும் உரிமையாளர்களாக இருப்பார்கள். அவர்களின் உழைப்புக்கு நான் கொடுக்கும் பரிசு இது” என்று கூறுகிறார். 


இதில் மேலும் படிக்கவும் :