வியாழன், 28 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By வீரமணி பன்னீர்செல்வம்
Last Modified: வியாழன், 30 அக்டோபர் 2014 (13:08 IST)

சுப்பிரமணியசாமி மீது தமிழக அரசு தொடர்ந்த அவதூறு வழக்கு விசாரணைக்கு உச்ச நீதிமன்றம் தடை

பாஜக தலைவர்களில் ஒருவரான சுப்பிரமணியசாமி மீது தமிழக அரசு மொத்தம் 5 அவதூறு வழக்குகளைத் தொடுத்தது.
 
சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட அந்த வழக்குகள் மீது கடந்த மாதம் விசாரணை நடந்தது. அப்போது அவதூறு வழக்கு தொடர்பாக சுப்பிரமணியசாமி சென்னை உயர் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராக வேண்டும் என்று உத்தரவிடப்பட்டது.
 
இதை எதிர்த்து சுப்பிரமணியசாமி டெல்லி உச்ச நீதிமன்றத்தில் மனு செய்தார். இதன் மூலம் சென்னை உயர் நீதிமன்றம் அனுப்பிய சம்மன்களுக்கு தடை பெற்றார்.
 
இதையடுத்து சென்னை உயர் நீதிமன்றத்தில் தனக்கு எதிரான அவதூறு வழக்கு விசாரணைகளை நடத்த தடை விதிக்க வேண்டும் என்று சுப்பிரமணியசாமி கோரிக்கை விடுத்தார். அந்த மனு மீதான விசாரணை இன்று உச்ச நீதிமன்றத்தில் நடந்தது.
 
அப்போது நீதிபதிகள் சென்னை உயர் நீதிமன்றத்தில் சுப்பிரமணியசாமிக்கு எதிரான வழக்கு விசாரணைக்கு தடை விதித்தனர். அதோடு இந்த வழக்கு தொடர்பாக தமிழக அரசு 6 வாரத்துக்குள் பதில் அளிக்க வேண்டும் என்றும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.