1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
  4. Supreme Court Quashes FIRs Against Student Protesters, CJP Withdraws September 5 Delhi March

உச்சநீதிமன்றம் முக்கிய உத்தரவு.. செப்டம்பர் 5 போராட்டத்தை வாபஸ் பெற்ற சிஜேபி...

CJP
உச்சநீதிமன்றத்தின் முக்கிய உத்தரவால் ஜூலை 20 முதல் 25ஆம் தேதி வரை நடைபெற்ற CJP போராட்டங்களை தொடர்ந்து மாணவர்கள் மீது பதிவு செய்யப்பட்ட வழக்குகள் ரத்து செய்யப்பட உள்ளன. குற்ற பின்னணி கொண்டவர்களை தவிர, போராட்டத்தில் பங்கேற்ற மாணவர்கள் மீது பல்வேறு மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் பதிவு செய்யப்பட்ட FIR-களை ரத்து செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
 
மத்திய அரசு தரப்பும், அந்த போராட்டங்கள் தொடர்பாக இனிமேல் புதிய வழக்குகள் பதிவு செய்யப்படாது என்று உறுதியளித்துள்ளது. இதையடுத்து செப்டம்பர் 5ஆம் தேதி டெல்லியில் நடத்த திட்டமிடப்பட்டிருந்த பேரணியை CJP அமைப்பு திரும்ப பெற்றுள்ளது.
 
எனினும், ஜந்தர் மந்தரில் போராட்டத்தில் பங்கேற்ற 2,873 பேரில் தீவிர குற்ற பின்னணி கொண்டவர்களுக்கு எதிரான ஒரு FIR-ஐ டெல்லி காவல்துறை தொடர்ந்து விசாரிக்க உச்சநீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.
 
மேலும், NEET-UG 2026 தேர்வு ரத்து செய்யப்பட்டதை தொடர்ந்து தற்கொலை செய்துகொண்ட மாணவர்களின் குடும்பங்களுக்கு இழப்பீடு வழங்குவது தொடர்பான நடைமுறையை மூன்று மாதங்களுக்குள் முடிக்க மத்திய அரசுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
 
மத்திய அரசின் உறுதிமொழி மற்றும் உச்சநீதிமன்றத்தின் உத்தரவை வரவேற்ற CJP, செப்டம்பர் 5 பேரணியை வாபஸ் பெறுவதாக அறிவித்துள்ளது. இரு தரப்பினரும் நம்பிக்கையுடன் பேச்சுவார்த்தை நடத்தினால் பிரச்னைக்கு தீர்வு காண முடியும் என தலைமை நீதிபதி சூர்யகாந்த் தலைமையிலான அமர்வு தெரிவித்தது.
 
Edited by Siva
About Writer
SIVA
வெப்துனியாவில் 10 ஆண்டுகளுக்கும் மேல் பணிபுரிந்து வருகிறேன். அரசியல் செய்திகள், பொழுதுபோக்கு, டெக்னாலஜி, மருத்துவம், பிசினஸ் செய்திகள் எழுதுவேன்..... Read More
அடுத்த கட்டுரையில்
அமெரிக்காவில் இரு தோழிகளை கொலை செய்த கேரள பெண்... ஓணம் பண்டிகைக்கு பின் நடந்த விபரீதம்..